சிற்பம்
தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
கருவறை விமானத்தின் தென்புற தேவகோட்டத்தில் அமர்ந்துள்ள ஆலமர்ச் செல்வன் தட்சிணாமூர்த்தி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
விமானத்தின் சுவர்ப்பகுதி தென்புறக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியின் பிற்கால சிற்பம் உள்ளது. இச்சிற்பத்திற்கு பின்னே சிதைந்த நிலையில் சோழர்கால ஆலமர் கடவுள் உள்ளார். அரைத்தூண்களுக்கிடையே அமைக்கப்பட்ட கோட்டத்தில், வீராசன நிலையில் அமர்ந்துள்ள சோழர் கால ஆலமர்ச்செல்வன், ஜடாபாரத்துடன் தலையை சற்று சாய்த்துள்ளார். நான்கு கைகளில் பின் கைகளில் உள்ளவை தெரியவில்லை. முன்னிரு கைகளில் வலது கை சின் முத்திரையும், இடது கை புத்தகமும் கொண்டுள்ளன. கழுத்தில் சவடி, கண்டிகை முதலிய அணிகளும், காதுகளில் பத்ரகுண்டலங்களும், மார்பில் முப்புரி நூலும் (யக்ஞோபவிதம்) தெரிகின்றன. முகம் சற்று சிதைந்துள்ளது. பரந்து விரிந்த கிளைகளுடன், இலைகளுடன் கூடிய ஆலமரம் உள்ளது. மரக்கிளைகளில் குரங்கு, பறவைகள் அமர்ந்துள்ளன. அரைத் தூண்களுக்கிடையே கோட்டத்தின் வெளியே இருபுறமும் முதலில் நின்ற நிலையில் வேதியர்களும், இடப்புறம் அமர்நிலையில் கணங்களும் இரண்டாவது வரிசையில் வலப்புறம் பாயும் நிலையில் சிங்கமும், இடப்புறம் இருபுலிகளும், அதற்கு கீழே மூன்றாவது வரிசையில் இருபுறமும் சன, சனகாதி முனிவர்களும் அமர்ந்துள்ளனர். இந்த உயிர்க் குலங்கள் யாவும் தென் முகக் கடவுளின் அறவுரையைக் உற்றுக் கேட்பதாக உள்ளன.
குறிப்புதவிகள்
தட்சிணாமூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்