Back
ஓவியம்
சர் ஐர் கூட் (Sir Eyre coote) (1726 – 1783)
ஓவியம் இருப்பிடம் #
ஊர் சென்னை
வட்டம் சென்னை
மாவட்டம் சென்னை
ஓவியர் பெயர்
ஓவியத்தின் பெயர் சர் ஐர் கூட் (Sir Eyre coote) (1726 – 1783)
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
விளக்கம்

தாமஸ் ஹிக்கி 

          தாமஸ் ஹிக்கி ஒரு ஐரிஷ் ஓவியர். இவர்  நோவா (Noah) மற்றும் அன்னே ஹிக்கிக்கு (Anne Hickey) மகனாக  டப்ளினில் பிறந்தார். இவரது இளைய சகோதரர் ஜான் ஹிக்கி ஒரு சிற்பி. அவர் ராபர்ட் வெஸ்டின் கீழ் ராயல் டப்ளின் சமுதாயப் பள்ளிகளில் பயிற்சி பெற்றார். உருவப்படங்களையே அதிக அளவில் வரைந்து வந்தார். இவர் 1776 மற்றும் 1780 ம் ஆண்டுகளில் இந்தியா, போர்ச்சுக்கள், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணித்து அங்கு தங்கி ஓவியங்கள் வரைந்தார். 

          இவரது இந்திய பயணத்தின் போது, அவர் பயணம் செய்த கப்பல் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் கடற்படைகளால் கைப்பற்றப்பட்டது. இது லிஸ்பனுக்கு செல்ல வழிவகுத்தது. சில காலம் அங்கு தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பின் இந்தியா வந்து வங்காளத்தில் 1791 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து பின்னர் இங்கிலாந்திற்குத் திரும்பினார். மீண்டும் 1798 ஆம் ஆண்டு இந்தியா வந்தார், அந்த சமயம் நான்காம் மைசூர் போர் துவங்கிய நேரம், ஹக்கி அங்கு தங்கி ஓவியங்கள் வரைந்தார். இவர் மைசூரில் இருக்கும் போது மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் குடும்ப உறுப்பினர்களை ஓவியங்களாக வரைவதற்கு நியமிக்கப்பட்டார்.  இவற்றில் திப்புவின் மகன்கள், மாமா மற்றும் துணைவர் ஆகியோர்களின் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும். இவ்வோவியங்கள் 1799 – 1801 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்ரீரங்கபட்டணம் மற்றும் வேலூரில் இருந்து வரையப்பட்டது.

          ஹக்கி சிறந்த ஓவியர் மட்டுமல்ல மிகச்சிறந்த பேச்சாளர் இவர் 1824 ல் இறக்கும் வரை சென்னையிலேயே தங்கியிருந்தார். இவரது பிற படைப்புக்கள் கோர்டோல்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட் (லண்டன்) (Courtauld Institute of Art), ஹானொலுலு கலை அருங்காட்சியகம் (Honolulu Museum of Art), அயர்லாந்து தேசிய கண்காட்சிக்கூடம் (National Gallery of Ireland,), டேட் (Tate), விக்டோரியா கலைக் கூடம் (பாத், இங்கிலாந்து) (Victoria Art Gallery) போன்ற இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சர் ஐர் கூட்

          சர் ஐர் கூட் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய். இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பல வருடங்கள் சேவை செய்தார். வந்தவாசிப் போரில் இவருடைய பங்களிப்பு அதிகம். இந்தப் போரின் மூலம் இந்தியாவைக் கட்டுப்படுத்த முயன்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே தீர்க்கமான திருப்புமுனையாக நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. 1756 ஆம் ஆண்டில் ரெஜிமண்டின் ஒரு பகுதியினர், இராபர்ட் கிளீவ்னுடன் இணைந்து கல்கத்தாவில் நடைபெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்டது. அக்டோபர் 1759 இல், பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களுக்கிடையே நடந்த போரில் பங்கேற்றார். அதில் அவர் மெட்ராஸ் படைகளை  கட்டளையிட்டு வழி நடத்தினார். 

          1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி வந்தாவாசிப் போரை முடிவுக்கு கொண்டு வந்தார். பின்னர் இங்கிலாந்து சென்று பாராளுமன்ற உறுப்பினரானார்.  மீண்டும் 1779 இல் இந்தியா வந்து  கம்பெனி படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸுடன் தன்னை சேர்ந்து பணியாற்றினார். இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போர் துவங்கியபோது, ஜூன் 1, 1781 வரை ஹைதருக்கு எதிரான கடுமையான தாக்குதலை மேற்கொண்டார். பின்னர் கல்கத்தா சென்று பணியாற்றினார். இறுதியாக ஏப்ரல் 28, 1783 அன்று அவர் சென்னை  இருந்த போது மாரடைப்பால் மரணம் தழுவினார்.

ஒளிப்படம்எடுத்தவர் தணிகை மணி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
சர் ஐர் கூட் (Sir Eyre coote) (1726 – 1783)
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 03 Jul 2017
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்