ஓவியம்
அழகர் கோயில்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் அழகர் கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
ஓவியத்தின் பெயர் அழகர் கோயில்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை சுவரோவியங்கள்
விளக்கம்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் தங்கள் ஆளூகைக்கு உட்பட்டப் பகுதிகளில் எண்ணற்ற கோயில்களைக் கட்டினர். அவற்றுள் சிறந்த கோயில் வரிசையில் அழகர்கோயிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு கட்டிடக்கலை, சிற்பக்கலையைத் தொடர்ந்து ஓவியக்கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இங்குள்ள வசந்த மண்டபத்தின் கூரை மற்றும் சுவர்ப்பகுதியில் இராமாயணத் தொடர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முதல் காட்சியாக, இக் கோயிலின் உற்சவர் ஆன திருமால் தம் இரு தேவியருடன் சேர்ந்து காணப்படும் காட்சி மிக நுண்னிய வேளைப்பாட்டுடன் காட்சியளிக்கிறது. இதைத் தொடர்ந்து இராமன் பிறப்பு முதல் ஒவியம் தொடங்குகிறது. தசரதனின் மனைவியர் மூவரும் பத்திரகாமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ளல். அமிர்தம் பெறுதல், மக்கட் பேறு அடைதல் , தம் மக்களைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல், இராமன் முதலானோர் விசுவாமித்திரருடன் - சென்று கல்விப் பயிற்சி, போர்ப் பயிற்சி பெறுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாடகைவதம், அகலிகை சாபவிமோசனம், சீதா கல்யாணம், இராமன் காட்டிற்குச் செல்லுதல், குகனுடன் படகில் இராம, லட்சுமணர், சீதை ஆகியோர் சரயு நதியைக் கடத்தல், தசரதன் மரணம் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியக் காட்சிகளுக்கும் விளக்கம், அன்றைய வட்டார பேச்சுத்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவியங்கள் மூலம் அக்கால பேச்சு வழக்கு, ஆடை ஆபரணங்கள், சடங்கு, பண்பாடு முதலியவற்றை அறியலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் இந்து சமய அறநிலையத்துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் இந்து சமய அறநிலையத்துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

அழகர்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அதன் கட்டுமானத்திற்கு ஏற்றவாறு ஓவியங்களை வரையத் தீர்மானித்துள்ளனர். மைய மண்டப கூரையில் துவங்கி, பின்னர் வெளிப்புற மண்டபத்தின் சுவர்களில் தொடர் காட்சியாக வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தொடரோவோவிய மரபு, செங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், அதியமான்கோட்டை, திருக்கோகர்ணம் போன்ற இடங்களிலும் காணக்கிடைகின்றது. இவை ஓவிய வரைவு முறைகளில் ஓவியர்களுக்கிடையேயுள்ள தொடர்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது.

குறிப்புதவிகள்
அழகர் கோயில்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    42 Files

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

  • TVA_PNT_00007_அழகர்-க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 348
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 45

தொடர்புடைய ஓவியம்