ஓவியம்

பனைமலை

பனைமலை
ஓவியம் இருப்பிடம் #
ஊர் பனைமலை
வட்டம் காணை
மாவட்டம் விழுப்புரம்
ஓவியத்தின் பெயர் பனைமலை
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை சுவரோவியங்கள்
விளக்கம்

பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட குடைவரை மற்றும் கட்டுமானக் கோயில்களில் கட்டுமானங்கள் மற்றும் சிற்பங்கள் மேலே வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. அது போல ஓவியத்தொகுதிகள் தனியாகவும் வரையப்பட்டுள்ளது. பெரும்பாலான பல்லவர் கால ஓவியங்கள் இயற்கை மற்றும் செயற்கைச் சீற்றங்களால் மறைந்து விட்டன. இருப்பினும் காஞ்சி – கைலாசநாதர் மற்றும் பனைமலையில் மட்டுமே குறைந்த அளவில் இவ்வோவியங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்களின் வரைவு முறை, வண்ணங்கள் யாவும் அஜந்தாவில் உள்ள சில ஓவியங்களுக்கு நிகரான தன்மையில் உள்ளது. இங்குள்ள ஓவியம் ஒன்றில் சிவ பெருமான் ஆடுகின்ற ஊழிக்கூத்து வரையப்பட்டுள்ளது. இவ்வோவியம் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றது. இதற்கருகே பார்வதி திரிபங்க நிலையில் தலையை சிறிதே தாழ்த்தி நாணத்துடன் காணப்படுகின்றார். மிக நுண்ணிய வேலைப்பாட்டுடன் கூடிய அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். நேர்த்தியான பூ வேலைப்பாடுகளில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உருவங்களை நிறைவு செய்வதற்கு அடர் வண்ணத்தைப் பயன்படுத்தி பின்புலத்தில் வரும் வண்ணங்களுக்கு இணையாக வரையப்பட்டுள்ளது. மஞ்சள், இளஞ் சிவப்பு, கருஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

பல்லவர் கால ஓவியங்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை என்றாலும், பனைமலை மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயில் காணப்படும் ஓவியங்களே பல்லவர் பாணி ஓவியங்களைப் பற்றி அறிய போதுமானவைகளாகும். இவ்வோவியங்கள் சமகால சிற்பங்களை ஒத்த வடிவமைப்பும், செய்நேர்த்தியும் காணப்படுகின்றது.

குறிப்புதவிகள்
பனைமலை
ஓவியம்

பனைமலை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_PNT_00014_பனைமலை_...

  • TVA_PNT_00014_பனைமலை_...

  • TVA_PNT_00014_பனைமலை_...

  • TVA_PNT_00014_பனைமலை_...

  • TVA_PNT_00014_பனைமலை_...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 361
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 12

தொடர்புடைய ஓவியம்