சர் சாமுவேல் ஆக்முடி (Samuel Auchmuty (1756-1822 AD)
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | சென்னை |
| வட்டம் | சென்னை |
| மாவட்டம் | சென்னை |
| ஓவியர் பெயர் | |
| ஓவியத்தின் பெயர் | சர் சாமுவேல் ஆக்முடி (Samuel Auchmuty (1756-1822 AD) |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம் |
|
விளக்கம்
சர் தாமஸ் லாரன்ஸ் (1769 -1830) பிறவிக் கலைஞன். சுயமாக ஓவியம் கற்றவர். அதுபோல சிறந்த வரைவாளர். இங்கிலாந்தின் முண்ணனி ஓவியருள் ஒருவர். மேலும் ராயல் அகாடமின் நான்காவது தலைவராவார். பிரிஸ்டல் நகரத்தில் பிறந்து பின்னர் தனது 18-வது வயதில் லண்டன் சென்று எண்ணெய் வண்ணத்தில் உருவப்படங்களை வரைவதில் தேர்ச்சி பெற்றார். உயர்குடி செல்வந்தர்களை வரைய ஆரம்பித்தார். முதலில் 1790-ஆம் ஆண்டு ராணி சார்லோட்(Queen Charlotte) அவர்களின் உருவப்படம் வரைவதற்கான ஆணை பெற்றார். 1810-ஆம் ஆண்டு பிரின்ஸ் ரீசென்ட் (Prince Regent) மூலமாக வெளிநாடு சென்று வின்ட்சர் கோட்டையில் ( Windser Castle) உள்ள வாட்டர்லூ சேம்பரில் (Waterloo chamber) இருக்கும் பிற தலைவர்களின் உருவங்களை வரைய நிதியுதவி பெற்றார். சாலி மற்றும் மரியா சிடான்ஸ் (Sally and Maria Siddons ) போன்றோரை காதலித்தார். ஆயினும் அவை அவருக்கு இனிமையான வாழ்க்கையை தரவில்லை. அவரது வெற்றியைக் காட்டிலும் அவர் கடனிலேயே ஆழமான வாழ்வை வாழ்ந்தார். இறுதி வரை திருமணம் புரியவில்லை. மறையும் வரை லாரன்ஸ் ஐரோப்பாவில் மிகவும் நாகரீகமான உருவப்பட வரையும் ஓவியராக இருந்தார். விக்டோரியா காலங்களில் அவரது புகழ் குறைந்துவிட்டது, ஆனால் அது சிறிது சிறிதாக மீட்கப்பட்டது. தனது இறுதி காலம் வரை ஒப்பற்ற உருவப்படம் வரையும் ஓவியராக இருந்தார். பின்னர் தமது அறுபதாவது வயதில் 1830-இல் உயிர் நீத்தார். லாரன்ஸின் கலைப் படைப்புக்கள் உலகெங்கும் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, லண்டனில் உள்ள தேசிய உருவப்பட காட்சிக்கூடம் (National Portrait Gallery), டேட் பிரிட்டன் (Tate Britain, தேசியக் கலைக் கூடம் (National Gallery), டூல்விட்ச் படக்காட்சி கலைக்கூடம் (Dulwich Picture Gallery) போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல அவரது சில படைப்புக்கள் ஹோல்பர்ன் கலை அருங்காட்சியகம் (Holburne Museum of Art) மற்றும் பாத் விக்டோரியா கலைக்கூடம் (Victoria Art Gallery), பிரிஸ்டல் சிட்டி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் (Bristol City Museum and Art Gallery) அமெரிக்காவில், தி ஹண்டிங்டன் நூலகம் (The Huntington Library), பின்கியை (Pinkie), எலிசபெத் பாரென்ரின் (லாரன்ஸ் சித்திரங்கள்) (Elizabeth Farren), மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட். Metropolitan Museum of Art. ஐரோப்பாவில் லூவுரெ அருங்காட்சியகம் ( Musée du Louvre) மற்றும் வத்திக்கான் பினாக்கோடெக்கா(Vatican Pinacoteca) போன்ற இடங்களில் உள்ளது. சர் சாமுவேல் ஆக்முடி (Samuel Auchmuty (1756-1822 AD) இவர் 1810-1813 காலப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் தலைமைத் தளபதியாக இருந்தார். சர் சாமுவேல் 1756 - இல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார், கிங்ஸ் கல்லூரியில் படித்தார் (இன்றைய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னோடி) அங்கு அவர் 1775 - இல் பட்டம் பெற்றார். பின்னர் 1777- இல் அமெரிக்க சுதந்திரப் போராட்ட யுத்தத்தில் ஈடுபட்டார். யுத்தம் முடிவடைந்த பின்னர் இங்கிலாந்து சென்று பின், அங்கிருந்து அவர் 52-ஆவது (ஆக்ஸ்போர்ட்ஷயரில்) ஃபுட் ரெஜிமென்ட் ஃபுட், பிரிவில் பணி புரிவதற்காக இந்தியாவுக்கு வந்தார். ஹைதர் அலிக்கு எதிரான கடைசி யுத்தத்தில் அவர் பங்குபெற்றார். 1790-இல் லார்ட் கார்ன்வால்ஸால் ஒரு ஊழிய நியமனம் வழங்கப்பட்டது. திப்பு சாஹிபிற்கு எதிரான நடவடிக்கைகளில் பணியாற்றினார். பின்னர் ஒரு Brevet லெப்டினென்ட் கேணல் (கர்னல்) ஆக இங்கிலாந்து திரும்பினார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தணிகை மணி |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
|
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Jun 2017 |
| பார்வைகள் | 88 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |