Back
ஓவியம்
சர் ஜார்ஜ் பார்லோ
ஓவியம் இருப்பிடம் #
ஊர் சென்னை
வட்டம் சென்னை
மாவட்டம் சென்னை
ஓவியர் பெயர்
ஓவியத்தின் பெயர் சர் ஜார்ஜ் பார்லோ
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
விளக்கம்

ஜார்ஜ் வாட்சன் RSA (George Watson)

          ஜார்ஜ் வாட்சன் RSA (George Watson  1767 - 24 ஆகஸ்ட் 1837) ஒரு ஸ்காட்டிஷ் உருவப்படம் வரையும் ஓவியர் மற்றும் ராயல் ஸ்காட்டிஷ் அகாடமி முதல் தலைவராகவும் இருந்தார். இரண்டு ஆண்டுகள் லண்டனில் உள்ள சர் ஜோஷொவின் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்ற பின் அவர் எடின்பர்க் நகரத்திற்குத் திரும்பினார் அங்கு தன்னை உருவப்பட ஓவியராக உருவாக்கிக் கொண்டார். பிற ஓவியர்களுடன் சேர்ந்து 1808 ஆம் ஆண்டு “ ஓவியர் சமூகத்தை“ துவங்கினார். இருப்பினும் அது சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவர் தனது படைப்புக்களை ராயல் அகாடமி மற்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தில் அடிக்கடி கண்காட்சி வைத்தார்.

          இவர் 1815-ல் லண்டனுக்கு உருவ ஓவியங்கள் வரைவதற்கு அழைக்கப்பட்டார். வாட்சன், வில்லியம் ஸ்மல்லி என்ற அச்சிடுபவர் மற்றும் இயற்கையியலாளரின் மகளான ரெபாக்காவை மணந்தார். இத்தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. வாட்சன் 24 ஆகஸ்ட் 1837 இல் எடின்பர்க் நகரில் இறந்தார். எடின்பர்க் நகரத்திலுள்ள செயின்ட் குத்பர்ட்ஸ் (St Cuthberts Churchyard )தேவாலயத்தின் தெற்கு சுவரில் அவர் புதைக்கப்பட்டார்.

சர் ஜார்ஜ் ஹில்லலோ பார்லோ (Sir George Barlow)

          சர் ஜார்ஜ் ஹில்லலோ பார்லோ (Sir George Barlow) 1st Baronet, GCB (20 ஜனவரி 1763 - 18 டிசம்பர் 1846)  கார்ன்வால்ஸின் மரணத்திற்கு பிறகு 1805 ல் முதல் இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாக சர் ஜார்ஜ் ஹில்லலோ பார்லோ லார்ட் மின்டோ வரும்வரை செயல்பட்டார். பார்லோ 1778 ஆம் ஆண்டு வங்காளத்திற்கான சிவில் பணியில் நியமிக்கப்பட்டார் பின் வங்காளத்தில் நிரந்தரமாக்க் குடியேறினார். அதன்பிறகு, பார்லொவ் மெட்ராஸ் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் 1812 ஆம் ஆண்டு திரும்ப அழைக்கப்பட்டார் பின்னர் தனது இறுதி காலம் வரை ஃபர்ன்ஹாம் தங்கி டிசம்பர் 1846 ல் இயற்கை எய்தினார்.

ஒளிப்படம்எடுத்தவர் தணிகை மணி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
சர் ஜார்ஜ் பார்லோ
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Jun 2017
பார்வைகள் 114
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்