திருவிளையாடற் புராணம்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | குற்றாலம் |
| வட்டம் | குற்றாலம் |
| மாவட்டம் | குற்றாலம் |
| ஓவியத்தின் பெயர் | திருவிளையாடற் புராணம் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | சுவரோவியம் |
|
விளக்கம்
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைக் கோயிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோயிலுக்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் வடபகுதியில் அமைந்துள்ளது. நான்கு புறம் சுல் மதில் இருக்க அதற்கு மத்தியில் மரத்தாலேயே ஆன சித்திர சபை அழகுற அமைந்திருக்கிறது. கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. இந்த சபை சிவனின் “திரிபுர தாண்டவம்’ நடந்ததாக கருதப்படும் இடமாகும். இந்த சித்திரசபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். இத் திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோயிலில் பூஜைகள் நடத்தப்படும். ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது குறிப்பிடதக்கதாகும். தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சித்திரவடிவிலேயே இறைவன் காட்டப்பட்டுள்ளார். சித்திரசபை கி.பி.16 அல்லது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் பராக்கிரமபாண்டியனால் தொடங்கப்பட்டு உதயமார்த்தாண்ட வர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களும் அதே காலகட்டங்களில் வரையப்பட்டிருகக்கூடும். இருப்பினும் முந்தைய கும்பாபிஷேகங்களின் போது இவ்வோவியங்களும் புணரமைப்பட்டுள்ளதால் மூல ஓவியத்தை முழுமையாக பார்ப்பது அரிது. அதே சமயம், ஒவியக்கட்டுமானம் மற்றும் உருவமைப்புகள் பெரிதும் பாதிக்கவில்லை, வண்ணங்களும் வரைவுமுறைகளிலும் மாற்றங்கள் சில இடங்களில் தெரிகின்றது. தற்சமயம் மீண்டும் இவ்வோவியங்கள் லக்னோ-இன்டெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமணக் காட்சி, கஜேந்திரமோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள், 63 நாயன்மார்கள், பெருமாளின் அனந்தசயனம், மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல், ரதி-மன்மதன், ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம், வாலிவதம், எட்டு வகை பைரவர், இலஞ்சி முருகன் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டிருகின்றன. ஓவியங்கள் வரைவு முறை தொடர்ந்து ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டதால் முதலில் வரையப்பட்ட ஓவியங்களில் உள்ள வண்ணங்கள் குறித்து கூற இயலவில்லை. ஆனால் ஏற்கனவே வரையப்பட்டிருக்கும் வண்ணத்திற்கு நிகரான மாற்று வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, கருப்பு போன்ற வண்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உருவங்களுக்கு பின்புறத்தில் பெரும்பாலும் சிவப்பு வண்ணமே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலான உருவங்கள் யாவும் பக்கவாட்டிலேயே வரையப்பட்டுள்ளது இருப்பினும் இறை உருவங்கள் சில நேர்முகமாக காட்டப்பட்டுள்ளது. சில ஓவியங்கள் தனித் தொகுதியாகவும் சில நீண்ட தொடர் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன அதில் ஒவ்வொரு காட்சியும் தனிச்சட்டங்களாக காட்டப்பட்டுள்ளது. ஓவியத் தொகுதிக்கு மேல் மற்றும் கீழ் புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆண் மற்றும் பெண் இருவரும் விதவிதமான அணிகலன்கள் அணிந்துள்ளனர். பெரும்பாலான ஆண் மற்றும் பெண் உருவங்கள் கீழாடை மற்றும் மேலாடையுடன் காணப்படுகின்றனர். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
கூத்தபிரானான சிவபெருமான் தாண்டவம் ஆடியதாக கருதப்படும் ஐந்து சபைகளில் குற்றாலம் சித்திரசபையும் ஒன்றாகும். இங்கு சிவன் திரிபுர தாண்டவம் ஆடியதாக நம்ப படுகிறது. இங்குள்ள சபையில் மட்டும் தான் கருவறையில் சிவன் ஓவியமாய் அமைக்கப்பட்டுள்ளார். அதுபோல சபை முழுவதும் இறைத் தொடர்பான கதைகள் தனித்தனியாகவும், தொடர் காட்சியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ந்த புணரமைப்பின் காரணமாக பழமையின் குணம் மாறி சில இடங்களில் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
28 Files
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
-
TVA_PNT_00021_குற்றால...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 25 May 2017 |
| பார்வைகள் | 153 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |