அகழாய்வு
பழையாறை
அகழாய்விடத்தின் பெயர் பழையாறை
ஊர் பழையாறை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1984
அகழாய்வு தொல்பொருட்கள் சிவப்பு பானையோடுகள், கருப்பு பானையோடுகள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், செவ்வக வடிவ ஓடுகள் மற்றும் குறைந்த அளவில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், இடைக்காலத்தைச் சேர்ந்த கூரையோடுகள், பல்வேறு வகையான பானையோடுகள், செங்கற் கட்டுமானங்கள் மேலும் இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு மற்றும் கருப்பு பானையோடுகள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள்,செவ்வக வடிவ கூரை ஓடுகள், சுடுமண்ணாலான விளக்குகள் மற்றும் தக்கிலிகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

சென்னைப் பல்கலைக்கழகம் 1964-65 ஆம் ஆண்டு நந்தன்மேடு, சோழன்மாளிகை ஆகியவிடங்களில் மேற்பரப்பாய்வினை மேற்கொண்டது.  இதில்சில பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தாழிகளும் சோழர் காலத்தினைச் சேர்ந்த செங்கற் கட்டுமானங்களும் கிடைத்தன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழ்பழையாறையில் 1984-ல் நடத்திய அகழாய்வில் இரண்டு பண்பாட்டுக் கூறுகள் வெளிப்படுத்தப்பட்டன. முதல் பண்பாட்டுக் காலம் கி.பி.400-800 வரையிலான பண்பாட்டு எச்சங்களையும், இரண்டாம் பண்பாட்டுக் காலம் 800-1400 வரையிலான பண்பாட்டுக் கூறுகளையும் வெளிக்கொணர்ந்தன.  முதல் அகழாய்வுக் குழி இங்குள்ள சோமநாதசுவாமி கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ள மேட்டில் போடப்பட்டது. இதில் மூன்று மண்ணடுக்குகள் கிடைத்தன. இதில் முதலிரண்டு மண்ணடுக்குகளில் சிவப்பு பானையோடுகள், கருப்பு பானையோடுகள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், செவ்வக வடிவ ஓடுகள் மற்றும் குறைந்த அளவில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் ஆகியன கிடைத்தன. இரண்டாவது அகழாய்வுக் குழியில் இடைக்காலத்தைச் சேர்ந்த கூரையோடுகள், பல்வேறு வகையான பானையோடுகள் ஆகியன வெளிக்கொணரப்பட்டன. மூன்றாவது அகழாய்வுக் குழியில் செங்கற் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டன. மேலும் இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு மற்றும் கருப்பு பானையோடுகள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள்,செவ்வக வடிவ கூரை ஓடுகள், சுடுமண்ணாலான விளக்குகள் மற்றும் தக்கிலிகள் ஆகியன கிடைத்தன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

        சோழர்களின் முக்கிய தலைநகரமான பழையாறை தற்போது கீழ்பழையாறை என்னும் சிறிய கிராமமாக விளங்குகின்றது. இவ்வூர் கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது.

      இவ்வூருக்கு அருகில் நுழையூர், சோழமாளிகை, ராஜேந்திரன் பேட்டை ஆகிய வரலாற்று ஊர்கள் அமைந்துள்ளன. பல்லவர் காலத்தில் நந்திபுரி அல்லது நந்திபுரம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் இவ்வூர் மண்டலத்து தலைநகரமாக விளங்கியது. தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரில் நடத்தப்பட்ட அகழாய்வு,

       தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் திரு.நடன.காசிநாதன் அவர்களின் வழிகாட்டுதலில் துறையின் மேனாள் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.துளசிராமன், திரு.செந்தில் செல்வகுமரன் மற்றும் துறையின் மேனாள் காப்பாட்சியர் திரு.இராமகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்பில் நடைபெற்றது.

குறிப்புதவிகள்
பழையாறை
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 Nov 2017
பார்வைகள் 24
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு