
மரக்காணம்
அகழாய்விடத்தின் பெயர் | மரக்காணம் |
---|---|
ஊர் | மரக்காணம் |
வட்டம் | திண்டிவனம் |
மாவட்டம் | விழுப்புரம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 2005-2006 |
அகழாய்வு தொல்பொருட்கள் | சுடுமண்ணாலான பொருட்கள் 27, உடைந்த கெண்டியின் மூக்குப்பகுதிகள் 14, புகைப்பான் 2, சதுரங்க காய் 1, தாங்கி 1, வட்டு 1, உடைந்த பணியாரச் சட்டி 1, கூரை ஓடு 1, அடிப்பான் 1, கூரை ஓடு 1, மோதிரங்கள் 2, செப்பு நாணயங்கள் 2, இரும்பு ஆணிகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
மரக்காணத்தில் மொத்தம் ஐந்து ஆய்வுக் குழிகள் அகழும் பணி மேற்கொள்ளப்பட்டன. முதலாம் அகழாய்வுக் குழி “பச்சை பைத்தான் கொல்லை“ என்ற புளியந்தோப்பில் அமைக்கப்பட்டது. இரண்டு பாள நிலைகள் இதில் வெளிக்கொணரப்பட்டன. இரண்டாம் அகழாய்வுக் குழியில் சொர சொரப்பான சிவப்பு நிற பானை ஓடுகளும், சுடுமண் கெண்டியின் உடைந்த மூக்குப் பகுதி, மூடி, அடிப்பான், வெண்ணிற பீங்கான் துண்டு ஆகிய 6 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாம் அகழாய்வுக் குழியில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 'L' வடிவ கூரை ஓடுகளும், கெண்டியின் மூக்குப்பகுதிகளும் கிடைத்துள்ளன. ஐந்தாம் அகழாய்வுக் குழியில் மூன்று பாள நிலைகள் உள்ளன. இக்குழியில் புகைப்பான், பணியாரச்சட்டி, தாங்கி, அடிப்பான் போன்ற தொல்பொருட்கள் கிடைத்தன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மரக்காணம் அகழாய்வில் மொத்தம் 51 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வூர் மத்திய கால தமிழகத்தில் ஒரு சிறந்த நகரமாகவும், உப்பளங்கள் நிறைந்த இடமாகவும் திகழ்ந்துள்ளது. அகழாய்வில் கிடைத்த சோழர் காலத்திய காசுகள், “ட“ வடிவில் கூரை ஓடுகள் ஆகியவை இதனை உறுதி செய்கின்றன. மேலும் இடைக்காலத்திய பானை ஓடுகளும், சுடுமண் குழாய்களும் கிடைத்துள்ளன. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப் படையில் குறிப்பிட்டுள்ள “எயிற்பட்டினம்“ மற்றும் பெரிபூளுஸ் குறிப்பிடும் சோபட்மா ஆகியவை தற்போதைய மரக்காணம் தானா என்பதை அகழாய்வின் மூலம் உறுதிப்படுத்த இயலவில்லை. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 20 |
பிடித்தவை | 0 |