
பேரூர்-திருநீற்றுமேடு மற்றும் பேரூர் கல்லூரி
அகழாய்விடத்தின் பெயர் | பேரூர்-திருநீற்றுமேடு மற்றும் பேரூர் கல்லூரி |
---|---|
ஊர் | பேரூர் |
வட்டம் | பேரூர் |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 2001-2002 |
அகழாய்வு தொல்பொருட்கள் | கண்ணாடி, அகேட், கார்னீலியன், குவார்ட்ஸ், பளிங்குக்கல், சங்கு, சுடுமண் இவற்றாலான மணிகள், சுடுமண்ணாலான தாய்த் தெய்வ உருவம், அடியவர் உருவம், யக்ஷன் உருவம், விளக்குகள், தக்களிகள், சதுரங்கக் காய்கள், வட்டுச் சில்லுகள், காதணிகள், சேர முத்திரை, வடிகால் ஆகியன மற்றும் கருப்பு சிவப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானையோடுகள், கிண்ணங்கள், பானைகள், குறியீடுகள் கொண்ட பானையோடுகள், நிலத்தில் இடப்பட்ட இடுதுளைகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
பேரூர் அகழாய்வு பேரூரின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ள திருநீற்றுமலை மற்றும் பேரூர் தமிழ்க் கல்லூரி வளாகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் கிடைத்துள்ள தொல்பொருட்களைக் கொண்டு கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதலான பண்பாட்டுக் கூறுகளை அடையாளங் காணமுடிகின்றது. இவ்வகழாய்வில் ஐந்து அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில் நான்கு பண்பாட்டுக் காலங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவை கி.மு.3- கி.பி.1, கி.பி.-1-3, கி.பி.3-6, கி.பி.6-9 ஆகிய கால அடிப்படையிலான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, அகேட், கார்னீலியன், குவார்ட்ஸ், பளிங்குக்கல், சங்கு, சுடுமண் இவற்றாலான 200-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைத்துள்ளன. சுடுமண்ணாலான தாய்த் தெய்வ உருவம் ஒன்று முதலாம் அகழாய்வுக் குழிஅடியவர் உருவம், யக்ஷன் உருவம், விளக்குகள், தக்களிகள், சதுரங்கக் காய்கள், வட்டுச் சில்லுகள், காதணிகள், சேர முத்திரை, வடிகால் ஆகியன மற்றும் கருப்பு சிவப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானையோடுகள், கிண்ணங்கள், பானைகள், குறியீடுகள் கொண்ட பானையோடுகள், நிலத்தில் இடப்பட்ட இடுதுளைகள் முதலிய தொ3செ.மீ. உயரமுடைய தாய்த்தெய்வ சுடுமண் சிற்பம் ஒரு குழந்தையை தன் மடியில் வைத்துள்ளது. 8 செ.மீ. மற்றும் 6 செ.மீ. விட்டமுள்ள சுடுமண் விளக்குகள் அழகிய வேலைப்பாட்டுடன் கூடியதாக கிடைத்துள்ளன. நான்கு பண்பாட்டுக் காலங்களிலும் மொத்தம் 32 வட்டுச் சில்லுகள் கிடைத்துள்ளன. அம்பு முனைகள், ஆறு நீரோட்டம், கோடுகள், வளைவுகள் உள்ளிட்ட குறியீடுகளுடன் கூடிய பானையோடுகளும் அகழப்பட்டன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஒரு ஊராகும். கொங்கு வாழ்விடங்களில் முக்கியப் பகுதியாக பேரூர் விளங்கி வந்துள்ளது. நொய்யல் ஆற்றங்கரை வழியே செல்லும் பெருவழிப் பாதையின் வழியில் பேரூர் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பேரூரைச் சுற்றியுள்ள பகுதிகளான கரூர், கொடுமணல், வெள்ளலூர், சூலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 1970-71 களில் மத்தியத் தொல்லியல் இங்கு அகழாய்வு மேற்கொண்டது. பேரூரில் அகழாய்வு திருநீற்றுமேடு மற்றும் பேரூர் தமிழ்க் கல்லூரி ஆகியவிடங்களில் மேற்கொள்ளப்பட்டது. கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுகள் பேரூர் அகழாய்வில் கிடைத்துள்ளன. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 20 |
பிடித்தவை | 0 |