அகழாய்வு
குறும்பன்மேடு
அகழாய்விடத்தின் பெயர் குறும்பன்மேடு
ஊர் குறும்பன்மேடு
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1984
அகழாய்வு தொல்பொருட்கள் இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சைப் பெரியகோயிலின் மேற்குப்புறம் 3 கி.மீ. தொலைவில் குறும்பன்மேடு எனும் சிறிய தொல்லியல் மண்மேடு அமைந்துள்ளது. இது செக்கடிமேடு எனப்படும் தொல்லியல் மண்மேட்டிற்கு வெகுஅருகாமையில் இருக்கிறது. குறும்பன்மேட்டில் உள்ள மண்மேடானது 3 மீ. உயரமுள்ளது. இங்கு இரண்டு அகழாய்வுக் குழிகள் போடப்பட்டன. கன்னிமண் வரை சுமார் 100 செ.மீ. ஆழத்திற்கு தோண்டப்பட்டது. இங்கு கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் அனைத்தும் இடைக்காலச் சோழர் காலத்தவை. இரண்டு பண்பாட்டுக் கூறுகள் இவ்வகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று 10-14-ஆம் நூற்றாண்டு வரையிலும், மற்றொரு பண்பாட்டுக் கூறு 14-நூற்றாண்டிற்கு பிறகான வரலாற்றுத் தடயங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள் ஆகிய தொல்பொருட்கள் இப்பண்பாட்டுக் கூறுகளில் கண்டெடுக்கப்பட்டன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை குறும்பன்மேடு அகழாய்வை மேற்கொண்டது. துறையின் மேனாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.ச.செல்வராஜ், திரு. சொ.சாந்தலிங்கம் மற்றும் காப்பாட்சியர் திரு.கலைவாணர் ஆகியோர் பங்குபெற்றனர்.

குறிப்புதவிகள்
குறும்பன்மேடு
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 Nov 2017
பார்வைகள் 23
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு