அகழாய்வு
செங்கலூர்
அகழாய்விடத்தின் பெயர் செங்கலூர்
ஊர் செங்கலூர்
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 2010
அகழாய்வு தொல்பொருட்கள் கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள், கற்பதுக்கைகள், சதுரமான கல்லாலான அமைப்பு, கல்வட்டங்கள், மட்கலக் கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் பொம்மைகள், அரிய கல்மணிகள், தங்கத்தினாலான ஒரு சிறி
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
விளக்கம்

செங்கலூர் ஒரு பெருங்கற்கால, இரும்புக்கால இடமாகும். இங்கு பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் பல காணப்படுகின்றன. செங்கலூர் இந்திய அரசுத் தொல்லியல் துறையின் கோயில் அளவீட்டு நிறுவனத்தின் சார்பாகத் தயாளன் அவர்கள் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு கற்பதுக்கைகளும், சதுரமான கல்லாலான அமைப்பும், கல்வட்டங்களும் காணப்பட்டன. இங்கு கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 300 ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஈமத் தாழிகளும் கிடைக்கின்றன. இங்கு மட்கலக் கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. மேலும் அரிய கல் மணிகளும், தங்கத்திலான ஒரு சிறிய மென்தகடும் கிடைத்துள்ளன. செங்கலூர் அகழாய்வில் கல்வட்டம், கற்பதுக்கை, செவ்வக வடிவ கற்கள் வைக்கப்பட்டிருந்த ஈமச்சின்னம் ஆகியன குறிப்பிடத்தக்கன. மேலும் இவ்வகழாய்வில் குஜராத்தில் கிடைக்கும் கார்னீலியன் மணிகள், குவார்ட்ஸ் கல்மணிகள் ஆகியன கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு பானையோடுகள், குறியீடுகளுடனான பானையோடுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. செங்கலூர் அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட உடைந்த நிலையில் ஒரு கிண்ணம் கிடைத்தமை தமிழகத்தில் செம்பின் பயன்பாடு பெருங்கற்காலத்தில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள ஈமக்காட்டில் பயன்படுததப்பட்டுள்ள சுருக்கான் கல் என்ற இரும்புடன் சேர்ந்த கல் தனித்துவம் வாய்ந்ததாகும். பிற்காலத்தில் இக்கற்கள் மராத்தியர்களால் அரண்மனைத் தூண்கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ. சசிகலா
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் மதுரை கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்

செங்களூர் திருச்சிக்குத் தென்கிழக்கே சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. செங்களூர் ஒரு பெருங்கற்கால, இரும்புக்கால இடமாகும். இங்கு பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் பல காணப்படுகின்றன. செங்களூர் இந்திய அரசுத் தொல்லியல் துறையின் கோயில் அளவீட்டு நிறுவனத்தின் சார்பாகத் தயாளன் அவர்கள் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு கற்பதுக்கைகளும், சதுரமான கல்லாலான அமைப்பும், கல்வட்டங்களும் காணப்பட்டன. இங்கு கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 300 ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஈமத் தாழிகளும் கிடைக்கின்றன. இங்கு மட்கலக் கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. மேலும் அரிய கல் மணிகளும், தங்கத்திலான ஒரு சிறிய மென்தகடும் கிடைத்துள்ளன. இவ்வூரை அடுத்துள்ள மேலப்பட்டி மற்றும் ஒத்தகாடு ஆகிய ஊர்களில் சுடுமண் பொம்மைகளும், கண்ணாடி மணிகளும், உயர் வகைக் கல் மணிகளும் கிடைத்துள்ளன.

குறிப்புதவிகள்
செங்கலூர்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 Jul 2017
பார்வைகள் 30
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு