சிற்பம்
பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் பிட்சாடனர்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
ஊர் திருக்கோடிக்காவல்
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
a:1:{i:0;s:2432:"வட்டணை படவந்த நாதராக பிச்சதேவர், கனமான பாதுகைகளை கால்களில் அணிந்தவராய், நாற்கரங்களோடு, மானுக்கு உணவூட்டியபடி, இடையில் நாகத்தினை கச்சையாகக் கட்டிய திகம்பரராய், பின்புறம் விரிந்த சடையில் இடதுபுறம் மதியையும்,வலதுபுறம் அரவத்தையும், உச்சி முகப்பில் கபாலத்தினையும் கொண்ட முக்கண்ணராய், இடது நீள்செவியில் பத்ரகுண்டலம் விளங்கிட, கழுத்து, கைகளில் அணிகள் துலங்கிட, நக்கன் நனி நாகரிகத்தனாய் நடக்கின்ற நளினக்காட்சி சோழர் கலைப்பாணியில் மிளிர்கிறது. பின் வலது கையில் உடுக்கையைப் பிடித்துள்ளார். பின் இடது கையில் பிடித்துள்ள நீண்ட முத்தலை சூலமானது தோளின் வழியே தலையின் பின்புறம் செல்கிறது. முத்தலை சூலத்தில் கபாலம் ஒன்று குத்தியவாறு காட்டப்பட்டுள்ளது பிச்ச தேவரின் தொன்மம். இக்கபாலம் பிரம்மதேவனின் தலையாகும். தாருகாவன முனிவர்களின் ஆணவ மலத்தை அடக்கிட, நக்கராய் வேடங்கொண்டு வசீகர புன்னகையுடன் முனிபத்தினியரிடம் தலைப்பலி தேற தலைவன் செல்லும் காட்சியிது. அருகில் முனிபத்தினியின் உருவம் காட்டப்பட்டுள்ளது.";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சிவவடிவங்களுள் ஒன்றான பிட்சாடனர் கோலம் தேவாரத்திலும், திருமுறைகளாலும் பாடப்பெற்ற எழில் வந்த திருக்கோலமாகும். நக்கன் பெருமானாகிய பிச்சதேவர் தலைப்பலி தேற தாருகாவனத்தில் நடந்து வந்த திருக்கோலம் சிற்பமாக இங்கு வடிக்கப்பட்டுள்ளது. தேவரின் வசீகர புன்னகையால் மயங்கியோர் தாருகாவன முனிபத்தினியர் மட்டுமல்ல சோழர்கால பெண்களுந் தான் போலும். பெரும்பாலும் அரசர்களின் தேவியர் எடுப்பித்த திருக்கோயில்களில் இச்சிற்பத்தை அமைத்திருந்ததுவும் இங்கு நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
பிட்சாடனர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்