சிற்பம்
திரிபுராந்தகர்
திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
ஊர் | கொடும்பாளுர் |
வட்டம் | விராலிமலை |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
விளக்கம்
முப்புரம் எரிக்க புறப்படும் முக்கண்ணர் மூவெயில் எரித்த பிரான்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கிரீவக் கோட்டத்தில் வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி மடக்கி, முன்னோக்கி பாய்ந்து, உடலைத் திருப்பியுள்ளார். தலையில் ஜடாமகுடம், நெற்றியில் தொய்யகம், நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் மணிகளாலான மாலை, மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம் ஆகியன அணிந்துள்ளார். கையணிகளாக தோள் வளையாக நாகாபரணமும், மூன்று முன் வளைகளும், பாதங்களில் சிலம்பும் காட்டப்பட்டுள்ளன. அரையாடையின் இடைக்கட்டு முடிச்சு பின்புறமாக பறக்கிறது. நான்கு கைகளில் முன் இடது கையில் வில்லையும், பின் வலது கையில் மழுவையும் கொண்டுள்ளார். முன் வலது கை முதுகில் கட்டியுள்ள அம்பறாத்தூணியிலிருந்து அம்பினை எடுக்கிறது. இடது பின் கை வியப்பு முத்திரை காட்டுகிறது. திரிபுராந்தகர் புருவங்களை நெரித்துள்ளார். அது அவரது கோபத்தைக் காட்டுகிறது. உடலைத் திருப்பிய வேகத்தில் சடைக்கற்றைகள் பின்புறம் பறக்கின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திரிபுராந்தகர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |