திரிபுராந்தகர்
திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
ஊர் | குற்றாலம் |
வட்டம் | தென்காசி |
மாவட்டம் | தென்காசி |
அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.-18-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
திரிபுராந்தகர் சிற்பம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திரிபுராந்தகர் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். முன்னிரு கைகளில் வில் அம்பை பிடித்துள்ளார். பின்னிரு கைகளில் மான்மறியும், வெண்மழுவும் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள முப்புரமெரித்தவர் புன்னகை முகத்துடன் காட்சியளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் விளங்க, நிள் செவிகளில் மகர குண்டலங்களும், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்களும் துலங்க, மார்பில் முப்புரிநூல் அணிந்து உள்ளார். சிவனாரின் 64 திருவுருவங்களில் ஒன்றான திரிபுராந்தகர் சிற்பம் சோழர் காலத்திலிருந்து சிறப்புப் பெற்றதாகும். பெருவீரனுக்குரிய இலக்கணங்களை இச்சிற்பம் பெற்று விளங்குகிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
முப்புரமெரித்த திரிபுராந்தகன் வடிவம் சிவனின் 64 வடிவங்களில் ஒன்றாகும். இச்சிற்பம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். விசயநகர-நாயக்க கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. அதிக அணிகலன்களுடன் காட்சி தருகிறது. |
திரிபுராந்தகர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |