சிற்பம்
அரசியார்
அரசியார்
சிற்பத்தின் பெயர் | அரசியார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
பணிப்பெண்டிர் சூழ அரசி அந்தப்புரத்தில் அமர்வு
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஆசனத்தில் அரசி அமர்ந்துள்ளார். இடது கையை ஆசனத்தில் ஊன்றி, வலது கையில் கண்ணாடியைப் பிடித்தவாறு அமர்ந்துள்ளார். குந்தளம் தலைக்கோலத்தைப் பெற்றுள்ள தேவி காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, அரும்புச் சரம், மார்பில் சன்னவீரம், கைகளில் தோள்மாலை, பூரிமத்துடன் கூடிய தோள்வளை, முன் வளைகள், கணுக்கால் வரையிலான மடிப்புடன் கூடிய இடையாடை, இடையில் மேகலை, பாதங்களில் பாதசாலம் (சிலம்பு) ஆகியன அணிந்துள்ளார். அரசியின் இருபுறமும் அவருடைய சேடியர் அவரைப் போலவே ஆடையணிகளுடன் காட்டப்பட்டுள்ளனர். வலது புறம் நிற்பவர் கையில் சாமரத்தைக் கொண்டுள்ளார். இடது புறம் நிற்பவர் இடது கையில் ஏதோ ஒரு பொருளை வைத்துள்ளார். வலது கையால் அரசியை சுட்டிக் காட்டி உரையாடுவது போல் உள்ளது. மற்றொரு சேடிப் பெண்ணும் சிறிய உருவமாகக் காட்டப்பட்டுள்ளாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அரசியார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
19
|
0
|
0
|
0
கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|