சிற்பம்
கங்கா தேவி
கங்கா தேவி
சிற்பத்தின் பெயர் | கங்கா தேவி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
கெண்டியில் கங்கை புனித நீருடன் நிற்கும் கங்காதேவியின் சிற்பம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கங்கா தேவி வலது காலை ஊன்றியும், இடது காலை சற்று தளர்வாக வைத்தவாறும் வைஷ்ணவ நிலையில் நிற்கிறாள். பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடமணிந்து, நெற்றிப்பட்டம் விளங்க, காதுகளில் மகரகுண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம், மார்பில் சன்னவீரம், தோள்களில் வாகுமாலை, தோள் மாலை, கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள், தொடையில் குறங்குச் செறி எனப்படும் தொடையணி, பாதங்களில் தொய்யலான சதங்கை ஆகியனவற்றை அணிகலன்களாகப் பெற்றுள்ளார். இடையில் அரைப்பட்டிகை, தாரகைச் சும்மையுடன் கூடிய முழங்காலுக்குக் கீழே செல்லும் மடிப்புடன் கூடிய பட்டாடை அணிந்துள்ளார். இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் பின்புறம் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றன. மார்பில் குஜபந்தம் எனப்படும் மார்பு பட்டி காணப்படவில்லை. வலது கையில் தாமரை மலரைப் பிடித்தவாறும், இடது கையில் கெண்டியை தாங்கியவாறும் உள்ளாள். இச்சிற்பம் அன்னபூரணி என்று பலரால் அடையாளங் காணப்படுகின்றது. ஆனால் அது ஆராயத்தக்கது. கங்கா தேவி இளமை பொங்கும் பூரிப்புடையவளாய், எழில் மிகு தோற்றத்துடன், புன்னகை அரும்பும் முகத்தினளாய் விளங்குகிறாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கங்கா தேவி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |