சிற்பம்
விஷ்ணு
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
காக்கும் கடவுள் கரியமால் கை குவித்து நிற்கும் கனியத் தோற்றம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விஷ்ணு நின்ற நிலையில் வலதுகாலை ஊன்றி, இடதுகாலை சற்று முன்னோக்கி வைத்தவாறு வைஷ்ணவ நிலையில் பரந்த மார்பினராய் உள்ளார். கிரீடமகுடராய், நான்கு திருக்கைகளில் மேற்கைகளின் விரல்களுக்கிடையே சக்கரம், சங்கு கொண்டவராய், கீழிரு கைகளை குவித்து வணங்கிய படி இருக்கிறார். கைகளில் செம்பொற் கைவளைகள் மூன்றினை அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ளார். சிங்க முகப்புடன் கூடிய இடையணி காட்டப்பட்டுள்ளது. கணுக்கால் வரை நீண்ட பட்டாடையின் முடிச்சுகள் பின்புறமாக இடையின் இருபுறம் கட்டப்பட்டு நீண்டு தொங்குகிறது. கால்களில் பாடகங்கள் உள்ளன. புன்னகை பூக்கும் அழகு முகத்தினராய் திருமால் திறந்த விழிகளோடு, சற்று விடைத்த மூக்கோடு, அழகிய சிறிய பவளச் செவ்வாய் இதழ்கள் கொண்டு, இளமையான தோற்றப் பொலிவினைப் பெற்று விளங்குகிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
விஷ்ணு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |