சிற்பம்
விஷ்ணு துர்க்கை
விஷ்ணு துர்க்கை
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு துர்க்கை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
வடபுறக் கோட்டத் தலைவியாகிய தாய்த் தெய்வம் விஷ்ணு துர்க்கை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
துர்க்கா தேவி பீடத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது காலை தளர்த்தி வைஷ்ணவ நிலையில் ஆறு கரங்களுடன் நிற்கிறார். பத்ர பூரிமத்துடன் விளங்கும் கரண்ட மகுடராய், நெற்றிப்பட்டை இலங்க, செவிப்பூ அணிந்து, நீள் செவிகளில் மகர குண்டலங்கள் துலங்க, கால்களில் வீரக்கழல்கள் அணிந்து வீரத்தின் அதிதேவதையாய் நிற்கின்றார். மூவிரு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அபய முத்திரை, இடையில் வைத்த கடி முத்திரை ஆகியவற்றை கைக் கருவிகளாகக் கொண்டுள்ளார். கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள் வளை, கடக வளை, முன் கைகளில் செம்பொற் வளை, விரல்களில் வளையங்கள் ஆகியன செம்மையுறுகின்றன. வீரத்தின் விளைநிலமாய் அன்னை பகைமையை அழிக்கும் முகத்தான் போர்க் கோலத்தில் நின்றிருந்தாலும், அமைதி தவழும் எழில் முகத்தை பெற்று விளங்குகின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
விஷ்ணு துர்க்கை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |