சிற்பம்
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சிற்பத்தின் பெயர் | சிறப்புலி நாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலி நாயனார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச்சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். புராணத்தில், "அஞ்செழுத்தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம் நஞ்சணி கண்டர்பாதம் நண்ணிடச்செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க்கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசன்தாள்நிழல் தங்கினாரே" என சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் சிறப்புலி நாயனாரைக் குறிப்பிடுகிறார். இச்சிற்பத்தில் சிவனடியார் இருவர்க்கு சிறப்புலி நாயனார் வேண்டுவன கொடுக்கிறார். அடியார் இருவரும் தன் இடது கையை தொடையில் வைத்தபடி, வலது கையால் வாங்குகின்றனர். கழுத்தில் உருத்திராக்க மாலையணிந்துள்ளனர். முழங்கால் வரையிலான சிவனடியார்களுக்குரிய ஆடையணிந்துள்ளனர். தலையில் சிவனடியார் அணியும் குல்லாய் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளனர். சிறப்புலி நாயனார் இடது கை தொடையில் வைத்தவாறு வலது கையால் கொடுக்கிறார். மார்பில் முப்புரி நூல் செல்கிறது. இவரும் சிவனடியாரைப் போன்ற எளிய ஆடை உடுத்தியுள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சிறப்புலி நாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
கலிக்கம்ப நாயனார்
கலிக்கம்ப நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|