வாயிற்காவலர்
வாயிற்காவலர்
| சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
வாயிற்காவலர் சிற்பம் இது. இக்காவலர் நான்கு கைகளைப் பெற்றுள்ளார். உடலை இடது புறமாக சாய்த்து, கால்களை சுவஸ்திகத்தில் ஊன்றிய தண்டத்தின் மீது வைத்து நிற்கும் இந்த வாயிலோனுக்கு தலைப்பகுதி சிதிலமடைந்துள்ளது. பின்னிரு கைகளில் வியப்பு முத்திரையும், போற்றி முத்திரையும் காட்டுகிறார். முன் கைகளில் இடது கையில் எச்சரிக்கை முத்திரையும், வலது கையில் தண்டத்தையும் பிடித்துள்ளார். வீரருக்குரிய ஆடை அணிகலன்களைக் கொண்டுள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வாயிற்காவலர்களின் சிற்பங்கள் சோழர்கள் காலத்தில் தனித்துவம் வாய்ந்தவையாகவும், பெரிய அளவினவாகவும் கலை நயத்துடனும் அமைக்கப்பட்டன. உள்ளூர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் சிற்பங்களில் இச்சிற்பமும் ஒன்றாகும். |
|
வாயிற்காவலர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |