சிற்பம்

வாயிற்காவலர்

வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
தென்முகக் கடவுள் மறையோதிய நிலையில் அமர்வு
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
விமானத்தின் பஞ்சரக் கோட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆண் உருவம் வாயிற் காவலராய் இருக்கலாம். ஏனெனில் சாலைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள சாலைக் கோட்டத்தின் இருபுறமும் உள்ள பஞ்சரக் கோட்டத்தில் இந்த ஆண் சிற்பங்கள் உள்ளன. எனவே இந்த சிற்பங்களை வாயிற் காவலராய் கருத இடமுண்டு. வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு, சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த சிவனடியாரான வாயிற்காவலர் இடது கையை தொடையில் வைத்தும், வலது கையில் மலரைப் பிடித்தபடியும் உள்ளார். சடை மகுடம் தரித்து, கழுத்தில் சரப்பளி என்னும் பெரிய ஆபரணம் விளங்க, காதுகளில் பத்ரகுண்டலமும், மகர குண்டலமும் அணிந்து, கைகளில் கேயூரம், முன்வளை விளங்க, வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல் அணி செய்ய, இடையாடை முடிச்சுகள் முன் விழ, அமைதியான தோற்றத்துடன் அமர்ந்துள்ளார். இவர் சிவபெருமானின் வாயிற்காவலர்களாகிய சண்டன், பிரசண்டன் என்ற இருவரில் ஒருவராய் இருக்கலாம். கையில் ஆயுதமின்றி, மிரட்டும் பாணியின்றி இச்சிற்பம் அமைந்திருப்பதால் வாயிற் காவலர் அல்ல என எண்ணுதல் இயலாது. ஏனெனில் இவ்வாறான தோற்றத்தில் துவாரபாலகர்களை அமைப்பதுவும் உண்டு. இவர் எண் திசை காவலர்களில் ஒருவராயும் இருக்கலாம்.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்
சிற்பம்

வாயிற்காவலர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 19
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்