சிற்பம்

வாயிற்காவலர்

வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்
சிற்பத்தின்அமைவிடம் குன்னாண்டார் கோயில்
ஊர் குன்னாண்டார் கோயில்
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
சிவனின் வாயிற்காவலர்களில் ஒருவரான பிரசண்டன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வாயிற்காவலர் ஜடாமகுடம் தரித்தவராய், பின்னால் கற்றைக் குழல்கள் இருபுறமும் பரந்திருக்க, நெற்றியில் மணிகளால் ஆன நெற்றிப்பட்டை அணிந்து, கோரப்பற்களை வெளியே நீட்டியவராய், உருட்டிய விழிகளுடனும், நெரித்த புருவங்களுடனும் முன் வலது கையால் எச்சரிக்கை முத்திரை காட்டி மிரள வைக்கிறார். பின் இடது கைகளில் முத்தலை சூலமும், பாசமும் கொண்டு, இடது முன் கையை ஊன்றியுள்ள கதையின் மீது வைத்துள்ளார். பின்புறம் இடைக்கட்டின் முடிச்சுக் காட்டப்பட்டுள்ள நிலையில் அரையாடை அணிந்துள்ள வாயிற் காவலரின் வலது முழங்காலுக்கு கீழே கிண்கிணி என்னும் அணி காட்டப்பட்டுள்ளது. காலில் தண்டையும், காற்சவடி எனப்படும் சிலம்பும் அணிந்துள்ளார். உடலைச் சுற்றி உடைமணி செல்கிறது. இது வீரர்களுக்கே உரித்தான அணியாகும். கழுத்தில் அரும்புச்சரம், நீண்ட ஆரம், மார்பில் சன்னவீரம், வயிற்றில் உதரபந்தம், தோள்களில் தோள் மாலை, கைகளில தோள் வளை, முன் வளை, விரல்களில் நடுவிரல் தவிர பிறவற்றில் வளையங்கள் அணிந்துள்ளார். இடது காலை ஊன்றி வலது காலை குறுக்காக ஊன்றிய கதையின் தலைப்பகுதியில் வைத்துள்ளார். கதையின் அருகில நாகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்
சிற்பம்

வாயிற்காவலர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்