சிற்பம்

வாயிற்காவலர்

வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்
சிற்பத்தின்அமைவிடம் கொடும்பாளுர் மூவர் கோயில்
ஊர் கொடும்பாளுர்
வட்டம் விராலிமலை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி
விளக்கம்
கருவறையின் காவலராய் நிற்கின்ற வாயிற்காவலர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வாயிற்காவலர் இடது காலை ஊன்றி, வலது காலை உயர்த்தி, பீடத்தின் மீது வைத்து ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். வலது கையை ஊன்றியுள்ள தண்டத்தின் மேல் ஊன்றியுள்ளார். இடது கை எச்சரிக்கை (தர்ஜனி) முத்திரை காட்டுகின்றது. பூரிமத்துடன் கூடிய ஜடாமகுடம், நெற்றிப்பட்டை ஆகியன தலையணியாகவும், காதுகளில் பத்ரகுண்டலங்கள் இருபுறமும் விரிந்த நிலையில் அணிந்துள்ளார். தலையின் பின்புறம் சடைக்கற்றைகள் பறந்தவாறு உள்ளன. கழுத்தில் சவடி அணிந்துள்ளார். மார்பில் பட்டையான முப்புரி நூல் காட்டப்பட்டுள்ளது. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கைகளில் தோள்வளை, முன்வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன உள்ளன. அரையாடை அணிந்துள்ளார். அரையில் அரைப்பட்டிகை முன்புற முகப்புடன் அணியப்பட்டுள்ளது. ஆடையின் முடிச்சு இடது பின்புறம் காட்டப்பட்டுள்ளது. கால்களில் தண்டை விளங்குகின்றன. நெரித்த புருவமும், உருட்டிய விழிகளும், கோரைப்பற்களுமாய் வாயிற் காவலர் காட்டப்பட்டிருந்தாலும் இறையடியார் என்னும் அமைதியும் குடி கொண்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்
சிற்பம்

வாயிற்காவலர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்