சிற்பம்

சிவலிங்கம்

சிவலிங்கம்
சிற்பத்தின் பெயர் சிவலிங்கம்
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

முதலாம் இராஜேந்திரசோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் உட்கோட்டை-மாளிகைமேடு என்றழைக்கப்படும் அரண்மனையின் எஞ்சிய பகுதி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வகழாய்வில் கிடைத்த பல சிற்பங்களும், தொல்கலைப் பொருட்களும், கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயிலில் கிடைத்த உதிரிச் சிற்பங்களும் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்வகழ் வைப்பகத்தில் சிவலிங்கம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் முன்னிருந்த பரிவார சிற்றாலயங்களில் ஒன்றாக இந்த சிவலிங்கம் வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும்.

 

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

கங்கை கொண்ட சோழபுரம் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள  சிவலிங்கம் ஒன்று  11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இச்சிவலிங்கம் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின் பரிவாரக் கோயில்களின் ஏதாவதொன்றில் வழிபாட்டில் இருந்திருக்கலாம்.

சிவலிங்கம்
சிற்பம்

சிவலிங்கம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Aug 2022
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்