Back
சிற்பம்
பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்)
சிற்பத்தின் பெயர் பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்)
சிற்பத்தின்அமைவிடம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
ஊர் பாகலஹள்ளி
வட்டம் தருமபுரி
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          தன் ஊரையும், மக்களையும், பயிர்களையும், கால்நடைகளையும் காக்கும் பொருட்டு கொடிய காட்டுப்பன்றியினை தன் கூரிய நீண்ட வேலால் குத்திக் கொன்று அதன் கொடிய தாக்குதலால் தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாய்ந்து வரும் பன்றியை தாக்கும் நிலையில் வீரன் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளான். இடையில் குறுவாள் தொங்குகிறது. அரையாடை உடுத்தி, கைகளில் வளை, கால்களில் வீரக்கழல்கள் அணிந்துள்ள இவ்வீரனின் நீள்செவிகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. வீரனின் வலப்புறம் அவனோடு உயிர்நீத்த சதிப்பெண்ணான அவன் மனைவி நிற்கிறாள். அவன் மனைவி முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி, வலது கையை இடையில் வைத்துள்ளாள். இடது கையில் தன் வீரமிகு கணவனுக்கான மதுக்குடுவையைப் பிடித்துள்ளாள். வீரன் மையமாக பெரிய உருவளவில் காட்டப்பட்டுள்ளான்.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
குறிச்சொல்
சுருக்கம்

         தருமபுரி மாவட்டத்தில் பாகலஹள்ளி என்னும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்த வெளியில் சில நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நடுகல் கொடிய காட்டுப்பன்றியை குத்திக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நினைவுக்கல்லாகும். இக்கல் பன்றிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும். இந்த நடுகல்லில் அவனோடு சேர்ந்து உயிர் துறந்த அவனது மனைவியும் சிறப்பிக்கப்பட்டுள்ளாள்.

ஆவண இருப்பிடம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
பன்றிக்குத்திப் பட்டான் கல் (சதிக்கல்)
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 May 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்