சிற்பம்

தீர்த்தங்கரர்கள்

தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின் பெயர் தீர்த்தங்கரர்கள்
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் இருவர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சமண மதம் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. ஐம்புலன்களையும் இருவினைகளையும் ஜெயித்தவர் (வென்றவர்) என்பதால் தீர்த்தங்கரர், ஜினர் என்று போற்றப்படுகிறார். ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் என்று அழைக்கப்பட்டது. இது தமிழில் சமண மதம் என வழங்கப்பட்டது. தீர்த்தங்கரரை, அருகபதவியை (பேரின்ப நிலை) அடைந்தவர் என்பதால் அருகன் என்றும் வழங்குவதுண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். அம்மதம் ஆருகதமதம் என்றும் வழங்கப்பட்டது. சமணர் நிக்கந்தர் என வழங்கப்பட்டனர். நிக்கந்தர் என்றால் பற்றற்றவர் என்று பொருள்படும். அதனால் சமணர் நிகண்டர் எனவும் வழங்கப்பட்டனர். சமண சமயம் நிகண்டமதம் எனப்பெயர்பெற்றது. சமணர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது. கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள சமண புடைப்புச் சிற்பத் தொகுதியில் உள்ள இரு தீர்த்தங்கரர்களின் சிற்ப வடிவம் இது. இருவரும் தாமரைப் பீடத்தின் மீது அர்த்த பத்மாசனத்தில் யோக நிலையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் தலைக்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. முனிவர்கள் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
தீர்த்தங்கரர்கள்
சிற்பம்

தீர்த்தங்கரர்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்