சிற்பம்
கொற்றாகிரியா
கொற்றாகிரியா
சிற்பத்தின் பெயர் | கொற்றாகிரியா |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | சமணர் மலை |
ஊர் | கீழக்குயில் குடி |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
சமண சமயத்தின் பெண் தெய்வங்களுள் கொற்றாகிரியா இயக்கி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சமணர் மலை மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. சமண மலையின் பின்புறம் அமைந்துள்ள செட்டிப்புடவு என்னும் மலைக்குகையில் சமணச்சிற்பங்களில் பெண் தெய்வம் சிற்பமும் காணப்படுகின்றது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. சங்க இலக்கியங்களில் வெற்றி வேண்டி வழிபடப்பெறும் பெண் தெய்வம் கொற்றவை ஆவாள். வேண்டுவோருக்கு கொற்றத்தைத் தருபவள். மேலும் கொல்கின்ற தன்மை உடையவளாதலால் கொல்லி எனப் பெயர் பெற்று கொற்றி என ஆயிற்று. கொல்லி மலை இத்தெய்வத்திற்குரிய இருப்பிடம் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சமண முனிவர்களுக்கு தொண்டாற்றும் இயக்கிகளுள் ஒருவராக கொற்றாகிரியா கருதப்படுகிறாள். கொல்லும் தன்மையுடைய அணங்காகிய பெண் தெய்வம் கொல்லாமை நோன்பு கொண்ட சமண தீர்த்தங்கரருக்கு சாசன யட்ஷியாக விளங்குவது நோக்கத்தக்கது. சமணர்கள் தங்கள் கொல்லாமை உள்ளிட்ட கொள்கைகளை மக்களிடையே பரப்ப, மக்களின் தெய்வங்களை தங்களுடைய பரிவாரங்களாகக் கொண்டு புனைவுகளை உருவாக்கினர். தங்களுடைய தெய்வங்களே வணங்கும் தீர்த்தங்கரர்களை மக்களும் பின்பற்றுவர் என்னும் நோக்கு நடந்தேறியது. அவ்வாறு தொல்குடி மக்களின் தாய்த்தெய்வமாக விளங்கிய இப்பெண் தெய்வம் பின் சமணர்களின் கொற்றாகிரியா இயக்கியாக மாறியது. இயக்கி எட்டுத்திருக்கைகளுடன் சிம்மத்தில் அமர்ந்து எதிரில் யானை மேல் அமர்ந்துள்ள வீரனுடன் போர் புரிகிறாள். எட்டுத் திருக்கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கொற்றாகிரியா
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |