Back
சிற்பம்

நடுகல் தலைப்பலி வீரன்

நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பத்தின்அமைவிடம் பெண்ணேசுவர மடம்
ஊர் பெண்ணேசுவர மடம்
வட்டம் பையூர் பற்று
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை நடுகல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-13ஆம் நூற்றாண்டு/
விளக்கம்
சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
தலையறுத்துத் தரும் வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்திருக்கிறது. தன் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பலியிடும் வழக்கம் அரசுருவாக்கத்திற்குப் பின் அரசனின் வெற்றிக்கானதாக மாறியிருக்கிறது. அக்காலத்துப் பூதத்திற்கு பலிகொடுப்பதாகவும், அரசனுக்கு உற்றதை ஒழிக்க வேண்டுமென முறையீட்டு தம்மைத் தாமே பலியிட்ட செய்தியை அறியமுடிகிறது. இவ்வாறு பலிகொடுத்ததற்காக நிலம் அழிக்கப்பட்டதையும், பல்லவர்கால நடுகல் குறிக்கிறது. இவை போர் நிமித்தமாக அரசனுக்காக நிகழ்த்தப்பட்ட உயிர்பலிகள் எனினும், போர்த் தெய்வமேனும் கொற்றவையே இப்பலிக்குரியவளாக பார்க்கப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. தன்னைத் தானே பலியிட்டு தன் குலத்திற்கு, தலைவனுக்கு வெற்றி வேண்டுவது சுவிப்பலி, ஆத்மபலி, நரபலி, களபலி தலைபலி, சிடிதலை (கன்னடம்) மிடிதலெ, கண்டதலெ (ஆந்திரம்) சாவாரப்பலி, தூங்குதலை கொடுத்தல், நவகண்டம் எனப் பல சொற்களால் அறியப்படுகிறது. களபலி என்பது போர்க்களத்தில் பூசல் தொடங்கும் முன் வெற்றி வேண்டி வெற்றி தெய்வமான கொற்றவைக்குக் கொடுக்கும் பலியாகும். இச்சிற்பத்தில் இடம் பெற்றுள்ள தலைப்பலி நடுகல் வீரன் தன் இடது கையால் உச்சிக் கொண்டையை பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள கத்தியால் கழுத்தை அரிகிறான். நெற்றியில் கண்ணி மாலை சூடியுள்ளான். கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம் எனப்படும் தோள்வளை, முன் வளைகள், இடையில் இடைக்கட்டுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை ஆகியவற்றை அணிந்துள்ளான். மிகவும் துன்பந்தரும் இச்செயலை தன் மனதிடத்தால் செய்யும் இவ்வீரன் செயற்கரிய செயல் செய்ய விழைந்த தன்மையை இச்சிற்பம் நன்கு விளக்குகிறது.
குறிப்புதவிகள்
நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பம்

நடுகல் தலைப்பலி வீரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்