Back
சிற்பம்
நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
சிற்பத்தின்அமைவிடம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
ஊர் பாகலஹள்ளி
வட்டம் தருமபுரி
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         போரில் இறந்துபட்ட வீரனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவிக்கும் எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாகலஹள்ளி ஊரில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணுக்கும் சேர்த்து எடுப்பிக்கப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் வலது கையில் உள்ள வாளை ஓங்கிய நிலையில், இடது கையில் கட்டாரியுடன் போரிடும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். வீரனின் வலதுபுறம் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவி முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி வலது கையை சதிப்பெண்டிர்க்கான முத்திரை போன்று வைத்துள்ளாள். இடது கையில் தன் வீரமிகு கணவனுக்கான மதுக்குடுவையைப் பிடித்துள்ளாள். வீரன் மற்றும் அவன் மனைவியின் ஆடையணிகளைக் கொண்டு இச்சிற்பத்தின் காலத்தை கணிக்கலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

        தருமபுரி மாவட்டத்தில் பாகலஹள்ளி என்னும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்த வெளியில் சில நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த அவனது மனைவியும் சேர்ந்து அந்த நடுகல்லில் சிறப்பிக்கப்பட்டுள்ளாள்.

ஆவண இருப்பிடம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 May 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்