சிற்பம்
திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
சிற்பத்தின் பெயர் | திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | அழகர்கோயில் |
ஊர் | அழகர்கோயில் |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | அழகர் கோயில் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
பலி என்ற மன்னர் பிரகலாதனின் மகனாவார். அசுர குலத்தைச் சேர்ந்த இவர் பூமி முழுவதையும் தம் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டார். அதன் பொருட்டு வேள்வி ஒன்றினைச் செய்திட முற்பட்டார். பலி மன்னருக்கு ஏற்பட்ட பேராசையையும் தன் முனைப்பையும் அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவர் கால் அடியின் வாயிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோற்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பையும், பேராசையையும் அழித்தார். இச்சிற்பத்தில் நாலிரு புயங்களுடன் எட்டுத் திருக்கைகளில் சங்கு சக்கரம், வாள் கேடயம், வில் அம்பு ஆகிய கருவிகளை தாங்கியபடி வலது காலை ஊன்றி, இடது காலை ஓங்கி உயர்த்தியபடி விண்ணை அளக்கிறார். அணிந்துள்ள பட்டாடை மடிப்புகளுடன் விரிந்து பரந்துள்ளது. கிரீட மகுடராய், செவிகளில் மகரகுண்டலங்கள், கழுத்தில் சரப்பளியும் நீண்ட பதக்க மாலையும் விளங்க, எண்ணிரு கைகளிலும் முன் வளைகளும், கடகமும், கேயூரமும் அணி செய்ய, உயர்த்திய இடது காலுக்கு இணையாக முன்னிரு இடது கையை உயர்த்தியுள்ளார். வலது முன் கை சிதைந்துள்ளது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இக்கோயில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கட்டிடக் கலைப் பாணிகளைப் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மண்டபங்களில் பெரும்பாலானவை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். கல்யாண மண்டபத்தின் தூண் சிற்பங்கள் விஷ்ணுவின் அவதாரங்கள், யாளி, அனுமன், அரசர்களின் உருவங்கள், கொடையாளிகள் ஆகிய திருவுருவங்களாகவும், அளவில் பெரியனவாகவும் வடிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் நான்காவது அவதாரமான வாமன அவதாரத்தில் திருமால் மாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு உலகளந்த பெருமாளாய் நின்ற காட்சி இங்கு சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |