சிற்பம்
யாளி
சிற்பத்தின் பெயர் யாளி
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
a:1:{i:0;s:2604:"யாளி ஒரு தொன்ம விலங்காகும். யாளி யானை மற்றும் மகரம் எனப்படும் கடல் விலங்கு இவற்றை விடவும் வலிமை வாய்ந்த்தாக கருதப்படுகிறது. நற்றிணைப் பாடல் (205) ஒன்று வேங்கையை வென்ற ஆளி என்ற தொன்ம விலங்கைக் குறிப்பிடுகிறது. யாளித்தூண்கள் வரிசையாக அமைக்கப்படுதல் கோயில் கட்டிடக்கலை மரபில் கி.பி.8-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் தொடங்கியுள்ளது. மாமல்லபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களில் சிம்மயாளி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாளி வகைகளான சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி இவற்றுள் பெரும்பாலும் சிம்மயாளித் தூண்களே தமிழக கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் மண்டபங்களை அதிக எண்ணிக்கையில் கோயில்களில் அமைத்த பெருமையுடைய விசயநகர-நாயக்கர் காலத்தில் யாளித்தூண்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை, வரதராஜபெருமாள் கோயில், நெல்லையப்பர் கோயில், கிருஷ்ணாபுரம், பேரூர், அழகர் கோயில் ஆகியவற்றில் அமைக்கப்பட்டன. அழகர் கோயில் மண்டபத்தில் உள்ள இந்த யாளித் தூண்கள் பெரிய அளவினவாகவும், சிற்ப நேர்த்தியுடனும் வடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
யாளி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்