சிற்பம்
அனுமன்
சிற்பத்தின் பெயர் அனுமன்
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
a:1:{i:0;s:1116:"அனுமான் வைஷ்ணவ நிலையில் நின்றபடி இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையில் காணப்படுகிறார். உச்சிக் கொண்டை தலையலங்காரமாக விளங்குகின்றது. நீள் செவிகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. செவிப்பூக்கள் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள வானர வீரனின் இடைக்கட்டின் ஆடை முடிச்சுகள் இருபுறமும் பின்புறம் நீண்டு தொங்குகின்றன. பின்புறம் மேல்நோக்கி தலைக்கு மேல் உயர்ந்துள்ள வாலில் மணி கட்டப்பட்டுள்ளது. ";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இராமாயணத்தில் இராமதூதனாக விளங்கிடும் அனுமனின் கோலம் விசயநகர-நாயக்க மன்னர்கள் காலத்திலிருந்து தூண் வழிபாடாக மாறியது. தூண்களில் அனுமனின் சிற்பத்தை அமைப்பது இன்றியமையாத ஒன்றாக அக்கால சூழ்நிலையில் ஆகிவிட்டதென்பதை எண்ணிறந்த நாயக்கர் கால திருப்பணி பெற்ற கோயில்கள் பறை சாற்றுகின்றன. அனுமன் வழிபாடு தொல்மாந்தர் வழிபாட்டிலிருந்து வந்த தன்மையையும், வீரவழிபாட்டினையும் குறித்து நிற்கிறது எனலாம்.
குறிப்புதவிகள்
அனுமன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்