சிற்பம்
வராகர்
சிற்பத்தின் பெயர் வராகர்
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
வராக மூர்த்தி கேழல் முகத்தினராய், கிரீட மகுடராய், வலது காலை நிலத்தில் வைத்தும், இடது காலை தொடை வரை உயர்த்தி மடக்கியும் நேர் பார்வை கொண்டவராய், பூமிதேவியை தன் இடது தொடையில் அமர்த்தி அணைத்துள்ளார். தேவியின் இரு கால்களையும் முன் வலது கை தாங்கியுள்ளது. முன் இடது கையால் தன் இடையை அணைத்தவரை, தலைவியும் தன் வலது கையால் அணைத்துள்ளார். அவளின் இடது கை கடக முத்திரையில் மலரைப்பிடித்துள்ளது. கணுக்கால் வரையிலான நீண்ட, மடிப்புகளுடன் கூடிய ஆடையணிந்த தேவியின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. வராகர் பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். கணுக்கால் வரையில் நீண்ட பட்டாடை மடிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. முத்தாலான அணிகள் அதிகமாக காட்டப்பட்டுள்ளன. வராகரின் உயர்த்திய காலின் கீழ் ஆதிசேஷன் என்னும் நாகம் தலையை தூக்கியவாறு காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான வராக அவதாரம் பூமிதேவியை காக்கும் பொருட்டு எடுத்த அவதாரமாகும் என்கிறது வராகபுராணம். கேழல் முகமும், மனித உடலும் கொண்டவராய் விஷ்ணு பூமிதேவியை மீட்டு, தன் தொடையில் இருத்தி, அணைத்தவாறு உள்ள இக்கோலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டின் குடைவரைக் கோயில்களிலிருந்து பல கோயில்களில் புகழ்பெற்ற சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
வராகர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்