சிற்பம்

காமாட்சி

காமாட்சி
சிற்பத்தின் பெயர் காமாட்சி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
பஞ்சாக்னி தவம் செய்யும் காமாட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பார்வதி தேவி பஞ்சாக்னியின் நடுவில் நின்றுகொண்டு தவம் செய்தார். நாற்புறமும் அக்னி சூழ்ந்திருக்க, தலைக்கு மேல் ஐந்தாவது அக்னியாக சூரியன் இருப்பது பஞ்சாக்னி. இக்கடுமையான தவத்தை பார்வதி தேவி இயற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மாங்காடு காமாட்சி, சங்கரன் கோயில் கோமதி ஆகிய பெண் தெய்வங்கள் பஞ்சாக்னி தவம் செய்து சிவனை அடைந்ததாக தலபுராணங்கள் கூறுகின்றன. திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள சிற்பத்தில் இருபுறமும் அக்னி சூழ, பெண்ணொருத்தி ஏகபாதத்தில் நின்று, சூரியனை நோக்கியவாறு தவம் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளாள். இப்பெண் பார்வதியாய் இருக்கலாம். இரு கைகளையும் கூப்பியபடி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் இப்பெண்ணின் கூந்தல் விரித்த நிலையில் பின்புறம் நீண்டுள்ளது. தொடை வரையிலான அரையாடை உடுத்துள்ளாள். இடையில் அரைப்பட்டிகை உள்ளது. கைகளில் தோள்வளை, முன்வளைகள் காட்டப்பட்டுள்ளன. மேலே குழந்தை ஒன்று படுத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
காமாட்சி
சிற்பம்

காமாட்சி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்