சிற்பம்
காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
| சிற்பத்தின் பெயர் | காலாரி (காலசம்ஹாரமூர்த்தி) |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | இறவாதீஸ்வரர் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
அட்ட வீரட்டர்களில் ஒருவராக மார்க்கண்டேயனுக்காக காலனை வதைத்த காலசம்ஹாரமூர்த்தி
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து காலன் மேல் இடது காலை வைத்து மிதித்து, வலதுகாலை உயர்த்தி தூக்கி தாக்கும் நிலையில் வைத்தவாறு அவனை எச்சரிக்கும் நிலையில் அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி நான்கு திருக்கைகள் பெற்றுள்ளார். எமனை எச்சரிக்கும் வலது முன்கை சிதைந்துள்ளது. பின் வலது கை மடக்கியவாறு காணப்படுகின்றது. இடது முன்கையில் முத்தலை சூலமும், இடது பின்கையில் வைத்துள்ளார். அவரின் காலடியில் காலன் வீழ்ந்துள்ளான். மேற்புறம் சிவலிங்கத்தை அணைத்தவாறு மார்க்கண்டேயன் சிறிய உருவமாக காட்டப்பட்டுள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட சடைமகுடம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகளில் வலதுகாது முன்கழுத்தில் வீழ்ந்துள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் உருட்டிய விழிகளுடன் கோபக்கனலில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 89 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |
தொடர்புடைய சிற்பம்
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
66
|
0
|
0
|
0
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
80
|
0
|
0
|