சிற்பம்
முருகன், செவ்வேள்
சிற்பத்தின் பெயர் முருகன், செவ்வேள்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கண்டியூர் பிரம்மசிரக் கண்டீசுவரர் கோயில்
ஊர் திருக்கண்டியூர்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் பிரம்மசிரகண்டீசுவரர் கோயில் கருவறை நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோயிலின் கருவறை நுழைவாயிலின் வலதுபுறம் நின்ற நிலையில் முருகனின் இவ்வடிவம் உள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்ட செயல்களுள் ஒன்றான பிரம்மனின் தலையைக் கொய்த தலமாகும். இத்தலத்தில் இறைவன் பிரம்மசிரகண்டீசுவர்ர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இங்கு சிவவடிவங்களுள் ஒன்றான பிரம்மனின் திருக்கோலத்தைக் கொண்ட வாகீசர் சிற்பமும் வழிபாட்டில் உள்ளது. இத்தகு தலத்தில் பிரம்மனின் படைப்புத் தொழிலில் குற்றம் கண்ட முருகன் அவரை தண்டித்து சிறையிலடைத்து தானே பிரம்மசாஸ்தாவாகி படைப்புத் தொழிலை மேற்கொண்டதாக கந்தபுராணம் கூறுகிறது. பிரம்மசாஸ்தா திருவுருவத்திலும், வேலைக் கையில் பிடித்துக் கொண்டு வீரனாகவும் முருகன் இத்தலத்தில் இறைவன் கருவறைக்கு வாயிற்காவலராக நிற்கிறார் என்பது விதந்து நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
முருகன், செவ்வேள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்