சிற்பம்

பூத கணங்கள்

பூத கணங்கள்
சிற்பத்தின் பெயர் பூத கணங்கள்
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
முனிவர் அசுரர் வடிவில் காட்டப்பட்டுள்ள பூத கணங்கள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள பூத வரியில் உள்ள பூத கணங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. இரு கணங்கள் ஒன்றொடொன்று பக்கவாட்டில் அமர்ந்துள்ளன. இடது பக்கத்தில் அமர்ந்துள்ள கணம் முதிய முனிவர் தோற்றத்தில் உள்ளது. தாடி, மீசையுடன் தலையில் ஜடாபந்தம் கொண்டு, நெற்றியில் மணிகளால் ஆன நெற்றிப்பட்டை விளங்க, வலது கையில் மதுக் குடுவையை பிடித்தபடியும், இடது கையால் அருகில் அமர்ந்திருக்கும் அரக்கர் வடிவமுள்ள கணத்திற்கு தன் இடது கையால் தர்ஜனீ (எச்சரிக்கை) முத்திரை காட்டிய படியும், இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி அமர்ந்துள்ளது. அருகில் அமர்ந்துள்ள மற்றொரு அசுர கணம் அழுதபடி வலது காலை குத்துக்காலிட்டு, இடது காலை மடக்கி அமர்ந்துள்ளது. முகத்தில் மீசையுடன் காணப்படும் இந்த அசுர கணம் வயிற்றில் பெரிய தொப்புளுடன் காட்டப்பட்டுள்ளது. முப்புரி நூல் மணிகளால் ஆனவையாக தோற்றமளிக்கிறது. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கழுத்தில் மணிகள் அல்லது முத்துக்களால் ஆன ஆரம் ஒன்று நீண்டு தொங்கும் மகர பதக்கத்துடன் விளங்குகின்றது. கையணிகள் உள்ளன. வலது கையை வயிற்றிலும், இடது கையை மடக்கி தோளிலும் வைத்தவாறு வாயைப் பிளந்து அழுகின்றது. தனக்கு மதுவைத் தர மறுப்பதால் உண்டான அழுகையிது. இக்காட்சி தேவர்களும் அசுர்களும் அமிர்தத்திற்காக போட்டியிட்ட காட்சியை நினைவுபடுத்துகிறது.
குறிப்புதவிகள்
பூத கணங்கள்
சிற்பம்

பூத கணங்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்