சிற்பம்
திருமகள்
திருமகள்
சிற்பத்தின் பெயர் | திருமகள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து வாழும் திருமகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அமிர்தம் வேண்டி தேவர்களும், அசூரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றானவள் திருமகள். செய்யோள் என தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் திருமகள் செல்வ வளத்திற்குரிய பெண் கடவுள் ஆவாள். செந்தாமரை மலரில் வீற்றிருப்பவள். இரு கரங்களிலும் செந்தாமரை மலரைப் பிடித்திருப்பாள். நன்னிமித்தத்திற்கும், வளமைக்கும் குறியீடாக அறியப்படுபவள். குன்னாண்டார் கோயில் மண்டபத் தூணில் காட்டப்பட்டுள்ள திருமகள் தாமரைப் பீடத்தின் மீது அர்த்த பத்மாசனத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்துள்ளாள். இரு கைகளிலும் தாமரை மலரைப் பிடித்துள்ளாள். திருமகள் பத்ர பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தரித்துள்ளார். நெற்றியில் தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டை விளங்குகின்றது. காதுகளில் செவிப்பூக்கள், தாடங்கம் என்னும் தோடு அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் சன்னவீரம், கொங்கைகளை மறைத்தவாறு குஜபந்தம் ஆகியன அமைந்துள்ளன. தோள்களில் தோள்மாலை உள்ளது. இடையில் நீண்ட மடிப்புகளுடன் கூடிய பட்டாடையும், கால்களில் பாத கடகமும், பாதங்களில சதங்கையும் அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திருமகள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |