சிற்பம்
பார்சுவநாதர்
பார்சுவநாதர்
சிற்பத்தின் பெயர் | பார்சுவநாதர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பேச்சிப்பள்ளம் |
ஊர் | கீழக்குயில் குடி |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
24 சமண தீர்த்தங்கரர்களில் 23-வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார். பார்சுவநாதர், நாடெங்கும் சமண சமயத்தைப் பரப்புவதில் பெரும் பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின் தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும் இவருக்கு உண்டு. துறவியர், பெண் துறவியர், இல்லற ஆடவர், இல்லறப் பெண்டிர் என்று நான்கு வகைக் குழுக்களாகப் பிரித்துச் சமண சமயத்தைப் பரப்பினார். ஆர்யதத்தர் என்ற துறவியின் தலைமையில் 16,000 துறவிகள், புட்பகுலர் என்ற பெண் துறவியின் தலைமையில் 38,000 குரத்திகள் (பெண் துறவியர்), சுவரதர் என்பவர் தலைமையில் 1,64,000 இல்லற ஆடவர், சுநந்தர் தலைமையில் 3,27,000 இல்லறப் பெண்டிர் ஆகிய இவர்கள் மூலம் நாடெங்கும் சமண மதம் பரவும் வழிவகைகளைப் பார்சுவநாதர் செய்தார். பார்சுவனாதரை, கமடன் என்னும் அசுரன் பாறைகொண்டு தாக்குகிறான். அவரை காக்க தர்நேந்திரன் என்னும் ஐந்து தலை நாகம் மேலிருந்து காக்கின்றான். இருவரையும், பத்மாவதி இயக்கி தன்னுடைய வஜ்ர குடையால் காக்கின்றாள். தோல்வியுற்ற கமடன், பார்சுவனாதரின் தாமரை பதத்தில் சரணடைகின்றான். சமணர் மலை சிற்பத் தொகுதியில் அமைந்துள்ள பார்சுவ நாதர் நெடிய உருவமாக, திகம்பரராக, திசைகளையே ஆடையாக உடுத்து, சமபாதத்தில் தாள் தாழ் தடக்கை நிலையில் (காயோசர்க்கம்) தாமரைப் பீடத்தின் மேல் நின்றுள்ளார். பார்சுவநாதரின் தலைக்கு மேல் குடையாக ஐந்து தலை நாகம் உள்ளது. தீர்த்தங்கரரின் வலதுபுறம் மேலே பறந்த நிலையில் கந்தர்வன் ஒருவன் வாழ்த்தொலிக்கின்றான். பார்சுவநாதரின் இடது புறம் மேலே கமடன் என்னும் அசுரன் பெருங்கல்லை கையில் தூக்கி பார்சுவநாதரை தாக்குவதற்காக பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளான். இந்த தாக்குதலில் இருந்து அப்பாண்டை நாதரை காக்கும் பொருட்டு பார்சுவரின் இடது புறம் பத்மாவதி இயக்கி நிற்கிறாள். அவள் வலது கையில் நீண்ட வஜ்ர குடையை பார்சுவநாதரின் தலைக்கு மேல் பிடித்துள்ளாள். முனிவரின் வலது புறம் கீழே அவர் பாதத்தில் கமடன் சரணடைந்த நிலையில் வணங்குகிறான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பார்சுவநாதர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |