சிற்பம்
நடுகல் வீரன்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பெண்ணேசுவர மடம் |
ஊர் | பெண்ணேசுவர மடம் |
வட்டம் | பையூர் பற்று |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நடுகல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
புலிக்குத்திப் பட்டான் கல்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வீரன் ஒருவன் புலியோடு சண்டையிடுவதாக இந்த நடுகல் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. அருகில் பெண்ணொருத்தி நின்றுள்ளாள். அவள் அவன் மனைவியாக இருக்க வேண்டும். தன் குடிகளின் உயிரைக் காக்க, தன் ஊரைக் காக்க வீரர்கள் புலி, பன்றி, காட்டு மான், எருது ஆகியவற்றோடு சண்டையிட்டு அச்சண்டையில் தன் உயிரை இழந்துள்ளனர். அவ்வாறு உயிர் நீத்த வீரர்களுக்கு அவ்விலங்குகளோடு அவர்கள் சண்டையிடும் காட்சியாக நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை மான் குத்திப்பட்டான் கல், புலிக் குத்திப்பட்டான் கல், பன்றி குத்திப்பட்டான் கல் என்று நடுகல் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கொடிய விலங்கான புலி வீரன் மீது பாய்கிறது. வீரன் இன்முகத்துடன் புலியோடு சண்டையிடுகிறான். இச்சண்டையில் வீரன் இறந்தாலும் அவன் பீடு நிலைக்கிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நடுகல் வீரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |