Back
சிற்பம்
ஞானசக்திதரர் - பிரம்மசாஸ்தா
சிற்பத்தின் பெயர் ஞானசக்திதரர் - பிரம்மசாஸ்தா
சிற்பத்தின்அமைவிடம் திருக்கண்டியூர் பிரம்மசிரக் கண்டீசுவரர் கோயில்
ஊர் திருக்கண்டியூர்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
a:1:{i:0;s:1353:"படைப்புக் கடவுளான பிரம்மாவைத் தண்டித்து சிறையிலடைத்த முருகனே பிரம்மசாஸ்தா என கந்தபுராணம் கூறுகிறது. பல்லவர்கள் காலத்தில் முருகனின் தனிக்கோலம் பிரம்ம சாஸ்தாவாக வழிபடப்பட்டு வந்தது. சோழர்களின் கலைப்பாணியாக விளங்கும் திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரரின் கோயில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் முருகனே வாயிற்காவலராக நிற்கிறார். சிவபெருமான் பிரம்மனின் சிரம் கொய்த இத்தலத்தில், நான்முகனின் தவறுக்காக அவரை சிறையிலடைத்த முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா கோலத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. ";}
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பிரம்மசாஸ்தா திருக்கோலம் முருகனின் பதினாறு வகை எழில் வடிவங்களுள் ஒன்றாக ஆகமங்கள் விவரிக்கின்றன. பல்லவர் காலத்தில் முருக வழிபாடு பிரம்மசாஸ்தா கோலத்தில் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரம் திரிமூர்த்தி குடைவரை, சென்னை அயனாவரம் பரசுராமேசுவரர் கோயில், காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவங்கள் காணப்படுகின்றன. பிரம்மசாஸ்தாவை வழிபட்டால் சகல வித்தைகளிலும் தேர்ச்சி, கல்வியறிவு, சாத்திரம், ஞானம் ஆகியவற்றைப் பெறலாம் என்பதாக விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
ஞானசக்திதரர் - பிரம்மசாஸ்தா
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்