Back
சிற்பம்

முருகன்-பிரம்மசாஸ்தா

முருகன்-பிரம்மசாஸ்தா
சிற்பத்தின் பெயர் முருகன்-பிரம்மசாஸ்தா
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நான்முகனின் தவறுக்காக அவரை சிறையிலடைத்த முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா கோலத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது. இக்கோலத்தில் முருகன் நான்கு கைகளுடன், சமபாதத்தில் நின்ற நிலையில் உள்ளார். பின்னிரு கைகளில் அக்கமாலையும், நீர்க்கெண்டியும் உள்ளன. முன்னிரு கரங்களில் வலது கை காக்கும் கரமாகவும், இடது கை இடைமீது வைத்த கரமாகவும் உள்ளன. இக்கோலத்தில் முருகன் வீரனுக்குரிய கோலமாக நெற்றியில் கண்ணிமாலை சூடி, தலையில் கரண்டமகுடமும், செவிகளில் மகரகுண்டலங்களும், கழுத்தில் கண்டியும் மார்பில் சன்னவீரமும் அணிந்துள்ளார். கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை உடுத்தியுள்ளார். தொடை வரை கடிசூத்திரம் முன்புறம் வளைந்து தொங்குகிறது. கால்களில் வீரக்கழல்கள் தெரிகின்றன. முகம் சற்று தெளிவற்று காணப்படுகின்றது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கொங்கு நாட்டில் கிடைக்கும் சிற்பங்களில் காலத்தால் தொன்மையானது இந்த முருகன் சிற்பமாகும். முருகன் இங்கு பிரம்மசாஸ்தாவின் கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். பிரம்மசாஸ்தா என்பது பிரம்மனின் தொழிற்கருவிகளை முருகன் தன் கையில் ஏந்தி நிற்பதாக அமைப்பது. நான்முகனின் பிரணவ மெய்ம்மை அறியாமையால் முருகன் படைப்புத் தொழிலை நடத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சிற்பம் ஈரோடு நகரத்தில் காமராஜ் ரோட்டில் கிடைத்தது.
குறிப்புதவிகள்
முருகன்-பிரம்மசாஸ்தா
சிற்பம்

முருகன்-பிரம்மசாஸ்தா

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்