சிற்பம்

சக்ராயுதமூர்த்தி

சக்ராயுதமூர்த்தி
சிற்பத்தின் பெயர் சக்ராயுதமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் பிறவாதீஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
அட்ட வீரட்டர்களில் ஒருவராக ஜலந்தரனை வதைத்த சக்ராயுதமூர்த்தி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பூமியில் உள்ள எந்த ஆயுதங்களாலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்ற சலந்தராசுரனை பூமியைக் கீறி சக்கர வரைந்து அதனையே ஆயுதமாகக் கொண்டு வதைத்த சக்ராயுதமூர்த்தி சிவபெருமானின் எட்டு வீரச்செயல் புரிந்தவருள் ஒருவர். சலந்தராசுரனை யோகபட்ட நிலையில் அமர்ந்தவாறு வதைக்கிறார். நான்கு திருக்கைகளில் மேலிரு கைகள் ஆயுதங்கள் கொண்டுள்ளன. கீழிரு கைகள் சிதைந்துள்ளன. யோகபட்ட நிலையில் அமர்ந்திருக்கும் இறையவனின் கீழ் பெரிய உருவமாக சலந்தரன் காட்டப்பட்டுள்ளான். அவனது வலது தோளில் இறைவனால் ஏவப்பட்ட சக்கரம் காட்டப்பட்டுள்ளது. ஜடாபாரம் தலையலங்காரமாகக் கொண்டுள்ள இறையனாரின் நீள்காதுகள் முன் தோள்களில் வழிந்தோடுகின்றன. அரக்கன் பெரிய உருவமாக மரணத்தைக் கண்டு பிதுங்கிய உருட்டு விழிகளுடன் நிலத்தில் வீழ்ந்த நிலையில் உள்ளான். நான்முகனும், திருமாலும் இருபுறமும் பக்கவாட்டில் உள்ள சிறு கோட்டங்களில் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். நான்முகன் ஜடாமகுடத்துடன் நான்கு தலைகளோடு, நான்கு திருக்கைகளோடு காட்டப்பட்டுள்ளார். வலது முன்கையை நடுமார்பில் வைத்தவாறும், வலது பின் கையை தொடையில் வைத்தவாறும், இடது முன்கை நடுக்கோட்டத்தில் அமைந்துள்ள சக்ராயுதமூர்த்தியை காட்டியவாறும், இடது பின்கை மேலே தூக்கியவாறும் காட்டப்பட்டுள்ளன. திருமால் கணுக்கால் வரை நீண்ட பட்டாடையுடன் கீரிடமகுடம் தரித்தவராய், வலது முன்கையால் ஜலந்தர வதைப்படலத்தைக் காட்டியவாறும், இடது முன் கையை மார்பில் வைத்தவாறும் உள்ளார். பின்னிரு கைகளில் இன்னதென்று அறியக்கூடவில்லை.
குறிப்புதவிகள்
சக்ராயுதமூர்த்தி
சிற்பம்

சக்ராயுதமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்