சிற்பம்
முருகன், தெய்வயானை
சிற்பத்தின் பெயர் முருகன், தெய்வயானை
சிற்பத்தின்அமைவிடம் நரசிங்கம்பட்டி இலாடன் கோயில்
ஊர் நரசிங்கம்பட்டி
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் இலாடன் கோயில் கருவறை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
விளக்கம்
கருவறையில் இருகரங்களை உடையவராய் முருகப் பெருமான் அமர்ந்திருக்க அவர் அமர்ந்துள்ள நீண்ட இருக்கையிலேயே அவரது இடதுபுறம் தெய்வானை அமர்ந்து உள்ளார். இறை இணையாக அமர்ந்துள்ள முருகனும் தெய்வயானையும் சுகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளனர். கந்தனுக்கு இடையில் பட்டாடை இடைக்கட்டுடன் ஆடையாக அமைந்துள்ளது. இடது கை தொடையின் மீது கடக முத்திரையிலும், வலது கை மார்பருகே கடக முத்திரையிலும் உள்ளது. சடைமகுடராய், நெற்றியில் கண்ணிமாலையணிந்து, மார்பில் சன்னவீரம் துலங்க, கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் விளங்க அமர்ந்துள்ளார். வயிற்றுப்பகுதியும், முகமும் சிதைவுபட்டுள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரையிலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைமலையின் பின்புறம் நரசிங்கப்பட்டியில் இலாடன் கோயில் என்னும் கந்தன் குடைவரை அமைந்துள்ளது. கருவறையில் முருகன் தெய்வானை இணை பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளனர்.
குறிப்புதவிகள்
முருகன், தெய்வயானை
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_SCL_001351/TVA_SCL_001351_ம...

  • TVA_SCL_001351/TVA_SCL_001351_ம...

  • TVA_SCL_001351/TVA_SCL_001351_ம...

  • TVA_SCL_001351/TVA_SCL_001351_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 95
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்