Back
சிற்பம்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் துக்காஜி ஆபத்சகாயேசுவரர் கோயில்
ஊர் துக்காஜி
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் ஆபத்சகாயேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை கலை மற்றும் வாழ்வியல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-12-ஆம் நூற்றாண்டு / சோழர்
விளக்கம்
இச்சிற்பத் தொகுப்பில் இக்கோயிலில் உள்ள சதுர வடிவத்தில் அமைந்த புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக தொகுக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் மேல்வரிசையில் ஐந்து பெண்களின் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. முதலாமவள் தலைக்கு மேல் கைகூப்பி வணங்குகிறாள். அமர்ந்திருக்கும் இரண்டாவது பெண் வியப்பு முத்திரை காட்டுகிறாள். மூன்று பெண்கள் நின்று கொண்டு இக்கோயில் இறைவனின் அழகை வியக்கின்றனர் போல் தெரிகின்றது. இக்காட்சியை அடுத்து நந்தி ஒன்று நிற்கிறது. ந்ந்தியின் முன்னால் இரு பூதகணங்கள் நின்ற நிலையில் கையில் குறுவாளுடன் காவல் புரிகின்ற காட்சி உள்ளது. கீழ் வரிசையில் ஆடல் மகளிரும் இசைப்பெண்டிரும் காட்டப்பட்டுள்ளனர்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.
குறிப்புதவிகள்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்