Back
ஓவியம்
சார்லஸ் கார்ன்வால்ஸ் (Charles Cornwallis)
ஓவியம் இருப்பிடம் #
ஊர் சென்னை
வட்டம் சென்னை
மாவட்டம் சென்னை
ஓவியர் பெயர்
ஓவியத்தின் பெயர் சார்லஸ் கார்ன்வால்ஸ் (Charles Cornwallis)
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
விளக்கம்

ராபர்ட் ஹோம் (Robert Home 1752-1834)

          ராபர்ட் ஹோம் 1791 ஆம் ஆண்டில் இந்திய துணைக் கண்டத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் எண்ணெய் ஓவிய ஓவியர் ஆவார். அவரது பயணத்தின்போது, வரலாற்று காட்சிகள் மற்றும் நிலப்பரப்புகளை அவர் வரைந்தார். இவர் இங்கிலாந்தில், பெர்விக்ஷையரில் உள்ள கிரீன்லாவிலிருந்தின் பிரபலமான இராணுவ அறுவை சிகிச்சை நிபுணரின் மகனாக ஹல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் 1769 ஆம் ஆண்டில் ராயல் அகாடமி பள்ளியில் சேர்ந்தார்.  மேலும் இவர் 1773 ஆம் ஆண்டு ரோம் சென்று அங்கு ஏஞ்சலிகா காஃப்மன் இன் கீழ் ஓவியப் பயிற்சி எடுக்கச் சென்றார். பின்னர் 1777 வரை இத்தாலியில் இருந்தார்.

          இவர் 1790 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருவதற்கு முன் 1783 முதல் 1789 வரை டப்ளின் மற்றும் லண்டனில் பணியாற்றினார்.  ராபர்ட் ஹோம் 5 பிப்ரவரி 1791 இல், மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போரில், லார்ட் கார்ன்வாலிஸின் படை பெங்களூரை நோக்கி நகர்ந்தபோது படையை பின் தொடர அனுமதிக்கப்பட்டார். இச்சமயங்களில் ஹோம் பிரசித்தி பெற்ற சில ஓவியங்களை வரைந்தார். அவற்றில், பிணையக் கைதியான இளவரசி, வகீலுடன் வீட்டை விட்டு வெளியேறுதல், குலாம் அலி மற்றும் திப்பு சாஹிப்பின் மகன்களை லார்ட் கார்ன்வாலிசு வரவேற்பது போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும். ராபர்ட் ஹோம் 1792 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தாமஸ் டேனியல் மற்றும் வில்லியம் டேனியல் ஆகியோருடன் நட்புறவு கொண்டார், அவர்கள் இயற்கைக் காட்சி ஓவியம் வரைவதற்கு ஊக்கப்படுத்தினா்.

          ராபர்ட் ஹோம் ஜனவரி / பிப்ரவரி 1793 ல் மஹாபலிபுரம் சென்றார். அதன் விளைவாக இரண்டு ஓவியங்கள் தீட்டினார். அவை மஹாபலிபுரம் சிதைவுகள் என்ற பெயரில் கொல்கத்தாவில் உள்ள தி ஏசியாட்டிக் சொசைட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவர் இந்திய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றை 250 நீர் வண்ண ஓவியங்களாக தீட்டினார் அதே சமயம் சில எண்ணெய் வண்ண ஓவியங்களையும் வரைந்தார். இவர் இந்திய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றில் 215 நீர் நிறங்களை உருவாக்கியுள்ளார், அவற்றில் சில அவர் எண்ணெய்களாகவும் பணியாற்றினார்.

          1795 ஆம் ஆண்டில் கொல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு ஒரு வளர்ந்த கலைஞராக இருந்து கொண்டு பணி செய்தார். அவர் சிறிது காலத்திற்குச் சங்கத்தின் செயலாளராகவும் மற்றும் முதல் நூலகப் பொறுப்பாளராகவும் இருந்தார் (1804) மேலும் கலைச் சேகரிப்புக்காக தனது படைப்பினில் சிலவற்றை நன்கொடையாக வழங்கினார். இவர் 1814 ஆம் ஆண்டில் லக்னோவிற்கு சென்றா.ர் பின்னர் மன்னர் நவாப் காசி-உத்-டின் ஹைடர் (1769-1827 அரண்மனையில் அரசு ஓவியராக பணியமர்த்தப்பட்டார்.  ராபர்ட் ஹோம் 1827 இல், கான்பூருக்குப் பயணம் சென்றார். பின்னர் அங்கு இருந்த போது 1834 இல் இறந்தார். இவரது தேர்ந்தெடுத்த மைசூர் காட்சிகள், திப்பு சுல்தான் நாடு போன்ற படைப்புக்கள் 1794 ஆம் ஆண்டு லண்டன் மற்றும் மெட்ராஸில் பதிப்புப் பெற்றன.

சார்லஸ் கார்ன்வால்ஸ் (Charles Cornwallis)

          சார்லஸ் கார்ன்வால்ஸ், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். அமெரிக்க போரில் ஈடுபட்ட முன்னணி பிரிட்டிஷ் தளபதிகளில் ஒருவராவார். 1786 இல், அவர் இந்தியாவில் கவர்னர்-ஜெனரலாகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அங்கு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் அதன் பிராந்தியங்களில் பாதிக்கப்பட்ட சிவில், இராணுவம், மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தில் பல குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதில் நில வரிச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். 1789 முதல் 1792 வரை, மூன்றாம் ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் மற்றும் கம்பெனி படைகளை அவர் வழி நடத்தி மைசூர் ஆட்சியாளர் திப்புசுல்தானை தோற்கடிக்க வழிநடத்தினார்.

          1791 ஆம் ஆண்டில் சமஸ்கிருத படிப்புக்காக வாரனாசியில் அரசு சமஸ்கிருத கல்லூரியை உருவாக்கினார். மேலும் கல்கத்தாவில் முதன் முறையாக நாணயங்களை உருவாக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். 1805 ஆம் ஆண்டில் கார்ன்வால்ஸ் இந்திய கவர்னர்-ஜெனரலாக மீண்டும் பதவியேற்றார். அக்டோபர் 5 அன்று காய்ச்சல் காரணமாக காசீப்பூரில் மரணமடைந்து, கங்கைக்கரையில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை இந்திய தொல்லியல் துறையினரால் நினைவிடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் தணிகை மணி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
சார்லஸ் கார்ன்வால்ஸ் (Charles Cornwallis)
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 03 Jul 2017
பார்வைகள் 92
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்