Back
அகழாய்வு
போளூவாம்பட்டி-கோட்டைக்காடு
அகழாய்விடத்தின் பெயர் போளூவாம்பட்டி-கோட்டைக்காடு
ஊர் போளூவாம்பட்டி
வட்டம் கோயம்புத்தூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1980-1981
அகழாய்வு தொல்பொருட்கள் 50-க்கும் மேற்பட்ட கல்மணிகள், சுடுமண் மணிகள், விலங்குகளின் எலும்புகள், சுடுமண் காதணிகள், இரும்புப் பொருள்கள், உடைந்த சங்கு வளையல் துண்டுகள், சுடுமண் முத்திரை, மூடிகள் மற்றும் குடுவைகள், “ரன் கொற்றி“ தமிழி பொறிக்கப்பட்ட பானையோட்டில், “ங்கு சபை விற்றி குழி“ என்ற வட்டெழுத்துப் பொறிப்பு, இரண்டு முத்திரைக் காசுகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

        தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1979-80 இங்கு அகழாய்வு மேற்கொண்டது. இவ்வூரில் நடத்தப்பட்ட மேற்பரப்பாய்வில் சமண, பௌத்த சமயத்தைச் சார்ந்த ஏராளமான சுடுமண் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

        கோட்டைக்காடு என்னுமிடத்தில் மூன்று அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. முதல் குழியில் குறிப்பிட்ட தொல்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டாம் அகழாய்வுக் குழியில் சுடுமண் காதணிகள், சுடுமண் முத்திரைகள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் கிடைத்தன. மூன்றாவது குழியில் 200-க்கும் மேற்பட்ட கல்மணிகள், 10 சுடுமண் மணிகள், சங்கு வளையல் துண்டுகள், விலங்குகளின் எலும்புகள், நிலத்தில் இடப்பட்டிருந்த குழிகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

        இவ்வகழாய்வில் காஞ்சியாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த வாழ்விடப்பகுதியில் 4 அடி உயரமான சாம்பல் மேடு இவ்வூர் ஒரு தொழிற்நகரப் பகுதி என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது தெரியவந்தது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          போளூவாம்பட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் நொய்யல் ஆற்றங்கரையில், காஞ்சியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் கி.பி.5-6-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஏராளமான சுடுமண் உருவங்கள் மேற்பரப்பில் கிடைத்தன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1979-80 ஆம் ஆண்டு இங்கு அகழாய்வை மேற்கொண்டது. துறையின் மேனாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்கள் தலைமையில், பதிவாளர் திரு.ர.பூங்குன்றன், அகழ்வாய்வாளர் திரு.ஆர்.செல்வராஜ் ஆகியோர் அகழாய்வுப் பணியை மேற்கொண்டனர்.

குறிப்புதவிகள்
போளூவாம்பட்டி-கோட்டைக்காடு
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 Nov 2017
பார்வைகள் 25
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு