அகழாய்வு
கொற்கை
அகழாய்விடத்தின் பெயர் கொற்கை
ஊர் கொற்கை
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1968-69
அகழாய்வு தொல்பொருட்கள் ஒன்பது அடுக்கு செங்கற் கட்டடப் பகுதி, மூன்று சுடுமண் வளையங்கள், தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள், அடுப்பு கரி துண்டுகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விளக்கம்
தாமிரபரணி ஆற்றின் வடக்கே சுமார் 3கி.மீ. தொலைவில் இவ்வூர் அமையப் பெற்றுள்ளது. பண்டைய காலத்தில் தாமிரபரணி ஆறு இப்பகுதி வழியாக சென்றுள்ளது என்பது ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது. சங்க காலத்தில் பாண்டியர்களின் மிகச் சிறந்த கடற்கரைத் துறைமுகப் பட்டினமாக கொற்கை விளங்கியது. கொற்கைப் பாண்டியர்கள் என்போர் ஐந்து பாண்டியருள் ஒருவராவர். கபாடபுரத்தையடுத்து கொற்கையே பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. சங்க காலத்தில் கொற்கை ஒரு முக்கிய முத்துக் குளிக்கும் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளதை சங்க இலக்கியங்களும், வெளிநாட்டவர் பயணக்குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. கிரேக்க, ரோமானிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்து முத்துக்களை வாங்கிச் சென்றதை அந்நாட்டவரின் பயணக்குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஒன்பது அடுக்குடன் கூடிய செங்கற் கட்டடப் பகுதி, ஆறு வரிசையில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்செங்கற் கட்டடப் பகுதிக்கு கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கி.பி.200-300 நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும், அடுப்பு கரித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. முன்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவ்வடுப்பு கரித்துண்டுகள் காலத்தை அறியும் பொருட்டு அனுப்பப்பட்டன. இவற்றின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கொற்கை மதுரைக்கு முன்பாக பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய ஊராகும். சங்க காலத்திய ஊரான கொற்கை ஒரு கடற்கரைத் துறைமுகப் பட்டினமாகும். இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்ற தொழிலாகும். பாண்டியர்களின் முத்துக்கள் கிரேக்கத்தில் பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதாகவும், அதிக பொருட்செலவு செய்து முத்துக்களை வாங்கி பெண்கள் அணிவதாகவும் அந்நாட்டறிஞர்களின் தொன்மைக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தகைய பழம் பெருமை வாய்ந்த ஊரான கொற்கையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வினை மேற்கொண்டு, அங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களைக் கொண்டு அதன் தொல் வரலாற்றினை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்புதவிகள்
கொற்கை
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 04 May 2017
பார்வைகள் 41
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு