110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
245 | : | _ _ |a குறும்பன்மேடு - |
346 | : | _ _ |a 1984 |
347 | : | _ _ |a இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள் |
500 | : | _ _ |a தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சைப் பெரியகோயிலின் மேற்குப்புறம் 3 கி.மீ. தொலைவில் குறும்பன்மேடு எனும் சிறிய தொல்லியல் மண்மேடு அமைந்துள்ளது. இது செக்கடிமேடு எனப்படும் தொல்லியல் மண்மேட்டிற்கு வெகுஅருகாமையில் இருக்கிறது. குறும்பன்மேட்டில் உள்ள மண்மேடானது 3 மீ. உயரமுள்ளது. இங்கு இரண்டு அகழாய்வுக் குழிகள் போடப்பட்டன. கன்னிமண் வரை சுமார் 100 செ.மீ. ஆழத்திற்கு தோண்டப்பட்டது. இங்கு கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் அனைத்தும் இடைக்காலச் சோழர் காலத்தவை. இரண்டு பண்பாட்டுக் கூறுகள் இவ்வகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று 10-14-ஆம் நூற்றாண்டு வரையிலும், மற்றொரு பண்பாட்டுக் கூறு 14-நூற்றாண்டிற்கு பிறகான வரலாற்றுத் தடயங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இரும்புப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் தக்கிலிகள், சுடுமண்ணாலான மணிகள், பழுப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள் ஆகிய தொல்பொருட்கள் இப்பண்பாட்டுக் கூறுகளில் கண்டெடுக்கப்பட்டன. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை குறும்பன்மேடு அகழாய்வை மேற்கொண்டது. துறையின் மேனாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.ச.செல்வராஜ், திரு. சொ.சாந்தலிங்கம் மற்றும் காப்பாட்சியர் திரு.கலைவாணர் ஆகியோர் பங்குபெற்றனர். |
653 | : | _ _ |a குறும்பன்மேடு, குரும்பன்மேடு, தஞ்சாவூர், அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
752 | : | _ _ |a குறும்பன்மேடு |c குறும்பன்மேடு |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
914 | : | _ _ |a 10.47 |
915 | : | _ _ |a 79.08 |
995 | : | _ _ |a TVA_EXC_00025 |
barcode | : | TVA_EXC_00025 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00025_குறும்பன்மேடு_சுடுமண்-பொருட்கள்-0001.jpg | : |
![]() |
Primary File | : |